Show all

முதலிடத்திலாம் பாரதிகண்ணம்மா தொடர்! சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு ‘பார்வையாளர்கள் தரும் வரிசை எண்ணில்’

இவ்வளவு நாளாக இல்லாத அளவில், பாரதிகண்ணம்மா தொடருக்கு ‘பார்வையாளர்கள் தரும் வரிசை எண்ணால்’ தற்போது சில கிழமைகளில் பாரதிகண்ணம்மா தொடர் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது . 

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாரதிகண்ணம்மா தொடருக்கு,  ‘பார்வையாளர்கள் தரும் வரிசை எண்ணால்’ விஜய் தொலைக்காட்சியும், பாரதி கண்ணம்மா தொடரின் நடிகர்களும், உச்ச பட்ச மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றார்கள்.

இவ்வளவு நாளாக இல்லாத அளவில், பாரதிகண்ணம்மா தொடருக்கு ‘பார்வையாளர்கள் தரும் வரிசை எண்ணால்’ தற்போது சில கிழமைகளில் பாரதிகண்ணம்மா தொடர் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது. 

இந்தத் தொடரில் கண்ணம்மா வேடத்தில் நடிக்கும் ரோசினி அரிப்பிரியன் புயலாக உருவெடுத்து தொடரில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் வீட்டை விட்டு வெளியே கோபமாக புறப்பட்டு வந்துவிட்டார். அதற்கு தனது கணவர் தன் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை சந்தேகப்படுவது ஒரு பெரிய காரணமாக இருந்ததால் இவர் அந்த உறவே வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு வீரமாக கையில் ஒரு பையுடன் நிறைமாத கர்ப்பிணியாக நடையோ நடையென்று நடந்து கொண்டிருக்கிறார். 

இணைய ஆர்வலர்கள் பலரும் கண்ணம்மா குறித்து பலவிதமாக கருத்துப்படம் வரைந்து பகடியாடி வருகிறார்கள். கைலாசத்துக்கு வேகமாக நடந்து கொண்டிருப்பது போலவும், அமெரிக்காவிற்கு சென்று டிரம்பை சந்திப்பது போலவும், கனடா சென்று தமிழர் விரும்பும் தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திப்பது போலவும், கருத்துப் படம் வரைந்து பகடியாடி வருகின்றார்கள். 

இந்த தொடரின் நடிகர்களுக்கு இந்த வரவேற்பும், நையாண்டியான பாராட்டும் கொண்டாட்டமாகி விட்டது. அதனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து அணிச்சல் (கேக்) வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.