Show all

ஊரடங்குப் பாதை தனித்து விடப்பட்டதா! கொரோனா வேறுபாதையில் பயணித்துக் கொண்டேயிருக்க

பழைய திரைப்படங்களில் கதை ஒரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கும். நகைச்சுவை தனியாக ஒரு பாதையில் முன்னெடுக்கப்படும். பலபடங்களில் நகைச்சுவை பெயர்விளங்க கதைப்பாதையும் கதைத்தலைவர்களும் காணாமலே பேய்விடுவார்கள். அதுமாதிரி கொரோனா சமூகப்பரவலுக்கு எதிராக என்று நமது அரசுகள் முன்னெடுத்த ஊரடங்கு பல்வேறு சிக்கல்களை முன்னெடுத்;து வருகிறது. 

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பழைய திரைப்படங்களில் கதை ஒரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கும். நகைச்சுவை தனியாக ஒரு பாதையில் முன்னெடுக்கப்படும். பலபடங்களில் நகைச்சுவை பெயர்விளங்க கதைப்பாதையும் கதைத்தலைவர்களும் காணாமலே பேய்விடுவார்கள். 

அதுமாதிரி கொரோனா சமூகப்பரவலுக்கு எதிராக என்று நமது அரசுகள் முன்னெடுத்த ஊரடங்கு பல்வேறு சிக்கல்களை முன்னெடுத்;து வருகிறது. சாராயக்கடைகளில் திருட்டு, கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம், அவர்கள் மீதான காவல்துறையின் தடியடி, கண்ணீர்ப்புகை, கொரோனா பாதிப்பில்- எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது போல இல்லாமல், ஊரடங்கு பாதிப்பை தட்டிக் கேட்க கிளர்ந்தெழுந்து விட்டார்கள். 

நடுவண் அரசு- தமிழக அரசுக்கு நிறைய சரக்குசேவை வரி பாக்கி கட்டாமல் நிலுவையில் வைத்திருக்கிறது. கொரோனா நிதியும் மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதை விட மிகமிக குறைவாக வழங்குகிறது. தமிழகம் சீனாவிடம் வாங்கியிருந்த கொரோனா விரைவு சோதனை கருவிகளைப் பெற்றுத் தருவதில் சுணக்கம் காட்டுகிறது. இத்தனை வலியையும் வெளிக்காட்டாமல் அதிமுக அரசோ- ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ, வருமான வரி, நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை உள்ளிட்ட சோதனைகளை நடுவண் பாஜக அரசு ஏவிவிட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. 

கொரோனாவோ தன்னுடைய பாதையே தனி என்பது போல, விமானத்தில் இறங்கிய வெளிநாட்டினர், அவர்கள் கலந்து கொண்ட மாநாடுகள், கூத்துக்கள், அவர்கள் சுற்றித்திரிந்த வணிகவளாகங்கள், அவரோடு தொடர்புகொண்ட மனிதர்கள் என்று அது வேறு ஒரு மேல்தட்;டுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 
கோயம்பேடில் கூடிய கூட்டத்திலோ, தொடர்வண்டி நிலையங்களில் கூடிய கூட்டங்களிலோ, குடும்ப அட்டை பொருள்கடையில், பணமும் பொருளும் வழங்கிய கூட்டங்களிலோ புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நடைபயணம் மேற்கொண்ட வகையிலோ, ஊரடங்கிற்கு பின்னாலும் திறக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளிலோ அத்துனை சமூக நெருக்கத்திலும் கொரோனா தொற்றைக் காணோம். 

கொரோனா- விமானப் பயணத்தில் தொடங்கி, மாநாடுகளிலும் கொண்டாட்டங்களிலும் பரவி, மேல்தட்டு மக்களின் கருத்துப்பரப்புதல்களோடு கருத்துப் பரப்புதலாவே பயணித்து வந்திருக்கிறது. அது பாமர மக்களின் சமூக நெருக்கத்தை சீண்டிப் பார்க்கவேயில்லை. தேவையில்லாமல் அரசுகள்தாம் பாமரமக்களை ஊரடங்கால் சீண்டிப்பார்த்திருக்கிறது.  

அரசுகள் முன்னெடுத்த ஊரடங்கு வேறு ஒரு பாதையில் சீரழிவைச் சிறப்பாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இதை மெல்ல மெல்ல நடுவண் அரசு புரிந்து கொண்ட வகையால், ஊரடங்கை தளர்த்த முன்வந்திருக்கிறது.

அதேசமயம்- அந்தக் கொரோனா தன்பாதையை இந்தப் பாமரத்தட்டிற்கும் திருப்பிவிடாமல், பார்த்துக் கொள்ள பயப்படாமல் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும். 

அஞ்சாமல் அவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். கொரோனா பரவுதலுக்கு ஊடகங்களாக இருப்பவர்களை அடையாளம் காட்டுவதில் மதப்பாகுபாடு காட்டக் கூடாது. டெல்லியில் குவிந்த கூட்டத்தையும் அடையாளம் காட்ட வேண்டும், கோவையில் நடந்த கூத்தையும் அடையாளம் காட்ட வேண்டும். 

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் திங்கட் கிழமை  முதல் நடைமுறைக்கு வரவுள்ள சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது நடுவண் அரசு. நடுவண் அரசின் செருப்பால் அடித்துவிட்டு வெல்லம் கொடுக்கிற இந்த நடைமுறைக்கு நன்றியே பாராட்டுவோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.