திங்கட் கிழமைக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3வரை இயங்கக் கூடாதவை, இயங்கலாம் எனும் சேவைகள் குறித்த பட்டியலை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. 02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திங்கட் கிழமைக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3வரை இயங்கக் கூடாதவை, இயங்கலாம் என நடுவண் அரசு தெரிவித்துள்ள சேவைகள் குறித்த பட்டியல்: இயங்க கூடாதவை:- இயங்க அனுமதிக்கப்பட்டவை:- ஏப்ரல் 20க்குப் பிறகு, மற்ற பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் நடுவண் அரசு கூறியுள்ளது.
1. பேருந்து, தொடர்வண்டி, விமான சேவைகள் இயங்காது
2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது
3. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
4. சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களைத் தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள்
5. ஆட்டோ, கார் உள்ளிட்ட வடகை சேவைகள் இயங்கக்கூடாது
6. வணிகவளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, குடிப்பகங்கள், மண்டபங்கள் மூடப்பட வேண்டும்
7. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது
8. வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது
9. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.
1. அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்
2. மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்
3. 50விழுக்காடு பணியாளர்களுடன் தேநீர், காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்
4. பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்
5. வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம்,
6. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், இயங்கலையில் பாடம் நடத்தலாம்
7. நூறு நாள் வேலைத்திட்டங்களில் சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம்
8. அஞ்சல் நிலையங்கள், பெட்ரோல் பங்;குகள் உள்ளிட்டவை இயங்கும்
9. சாலை, தொடர்வண்டி, விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும்
10. அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆய்வகம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இயங்க அனுமதி
11. ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம்.
12. தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் இயங்கலாம்
13. கிராம அளவிலான மின்சேவை மையங்கள் இயங்க அனுமதி
14. தூதஞ்சல் சேவைகளுக்கு அனுமதி
15. குழாய் பொருத்துதல், மின்பணியாளர்கள், இயந்திர வேலையாள், தச்சர் உள்ளிட்டோருக்கு அனுமதி
16. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி. பணியாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்
17. கிராமப்புறங்களில் செங்கல் சூளைகளுக்கு அனுமதி
18. கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி.
19. 33 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



