குறுவை சாகுபடி என்பது வேளாண் பெருமக்களுக்குத் தெரியும். நமது நாட்டின் பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் கொரோனா பீதியில் நடுவண் பாஜக அரசு சொல்லுகிறபடி கையைத்தட்டவும், விளக்கணைத்தேற்றவும் செய்யும் போது, கமல்; அழகாக நடுவண் பாஜக அரசின் கோமளித்தனமான கொரோனா நடவடிக்கைகளை திறனாய்வு செய்து வருகிறார். 03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவை விட மிகப் பெரிய சிக்கல் வெடிப்பதற்குள், பால்கனி அரசு, தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் கூறியுள்ளார். இதுகுறித்து, தனது கீச்சுப் பக்கத்தில் கமல் கூறியதாவது: அனைத்து பால்கனி மக்களும் தரையை கூர்ந்து கவனிக்கவும், முதலில், டில்லி, தற்போது மும்பை. புலம்பெயர்ந்த தொழிலாளர் சிக்கல் என்பது, ஒரு, மணி குறிக்கப்பட்ட வெடி போன்றது. கொரோனாவை விட, மிகப்பெரிய இச்சிக்கலை வெடிப்பதற்கு முன்பே செயல் இழக்க செய்ய வேண்டும். பால்கனி அரசு, தரையில் நடப்பவற்றையும் கவனிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். உதவி செய்யும் கட்சி நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வாங்குபவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டாம் என கட்சியினருக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அறிவுரை கூறியுள்ளார். அவரது அறிக்கை: நம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி அயராது களப் பணியாற்றி வருகின்றனர். மக்கள் நீதி மையம் என்ன செய்தது என கேட்கும் சிலரின் வெற்று வாதத்திற்கு மக்கள் பதில் வழங்குவர். புறம் பேசுபவர்களின் பக்கம் திரும்பி நேரத்தையும் நோக்கத்தையும் வீணாக்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது ஊடகங்களை அழைத்துச் சென்று விளம்பரப் படுத்துவதையோ உணவுப் பொருட்களின் மீது சின்னத்தையோ தலைவர் படத்தையோ அச்சிடக் கூடாது. அது நம் அரசியல் இல்லை என்பதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். உதவி வழங்கும் இடங்களில் உதவிப் பொருட்களுடன் நீங்கள் இருக்கும் படங்களை மட்டுமே பதிவு செய்யுங்கள்; உதவி பெறுபவரின் படத்தை எடுக்காதீர். அது அவர்களை காயப்படுத்தி விடலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



