மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக் கொண்டால் போதும். அதானி நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களைக் கட்டினால் என்ன? அம்பானி கட்டினால் நமக்கு என்ன? என்கின்றனர் உழவர்கள். 01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இனி உணவுப் பொருள்களை வாங்க நுகர்வோரும் அதானி குழுமத்திடம்தான் கையேந்த வேண்டும். டெல்லியில் நடைபெற்று வரும் உழவர்கள் போராட்டத்திலும் இந்தத் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும்- மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக் கொண்டால் போதும். அதானி நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களைக் கட்டினால் என்ன? அம்பானி கட்டினால் நமக்கு என்ன? என்கின்றனர் உழவர்கள். உழவர்களிடம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா என்னும் கிராமங்களில் இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பல லட்சம் டன் தானியங்களைச் சேமிக்கும் திறன் கொண்டது. இதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா என்னுமிடத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களிலிருந்து வட இந்தியா முழுமைக்கும் தானியங்களை விநியோகிக்க உள்ளது இந்திய உணவுக் கழகம் இனி உணவுப் பொருள்களை வாங்க நுகர்வோரும் அதானி குழுமத்திடம்தான் கையேந்த வேண்டும். இது நீண்ட நாளைக்கு சேமித்து வைத்து அதிக விலை கிடைக்கும் சமயங்களில் விற்கும் நிலைக்கு வழிவகுக்கும் என்கிற தகவல் புலனம், சமூக ஊடகங்களின் வழியாக வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் உழவர்கள் போராட்டத்திலும் இந்தத் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அதானி குழுமம் கீச்சுவில் தனது விளக்கத்தை அளித்துள்ளது: “நாங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதோ, விளைபொருள்களுக்கான விலையை எவ்வளவு நிர்ணயிக்க வேண்டும் என்பதோ எங்களிடம் இல்லை. விளைபொருள்களைச் சேமிப்பதற்கான நவீன தானிய களஞ்சியங்களை மட்டுமே அமைத்திருக்கிறோம். இந்திய உணவுக் கழகத்துக்கு விளைபொருள்களைச் சேமிப்பதும் அதைக் கொண்டுபோய் சேர்ப்பதும் மட்டும்தான் எங்கள் வேலை" என்று தெரிவித்திருக்கிறது. ஆனாலும்- மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக் கொண்டால் போதும். அதானி நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களைக் கட்டினால் என்ன? அம்பானி கட்டினால் நமக்கு என்ன? என்கின்றனர் உழவர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



