Show all

ஏமாந்து இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் சித்ரா! ஹேமாந் அந்த மூன்று ஆசைகளை முடித்து வைக்க- முன்னெடுத்தது பதிவுத் திருமணம்

ஒற்றைப் பதிவுத் திருமணத்தில், சித்ராவின் மூன்று ஆசைகளுக்கும் முடிவுரை எழுதிவிட்டார், அடாவடிக் கணவராக ஹேமந்த். சித்ராவிற்கு எந்தவித ஒத்துழைப்பையும் தராமல் இருந்துள்ளார். இப்படி, தான் ஆசைப்பட்டது எதுவுமே நிறைவேறாமலேயே சித்ராவின் உயிர் பிரிந்துள்ளது!

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்ராவின் அந்த மூன்று ஆசைகளை எளிதாக நிறைவேற்றியிருக்கலாம் ஹேமாந். ஆனால் ஏமாந்து போய் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார் சித்ரா என்று புலம்பித் தவிக்கின்றனர் ஆற்றாமையால் அவரின் அருமையான கொண்டாடிகள்.

சித்ரா என்னவெல்லாம் ஆசைப்பட்டாரோ, அது எதுவுமே நடக்கவில்லை என்பதே பரிதாபம். இதைதாம் அவரது கொண்டாடிகள் நினைவுகூர்ந்து வருகிறார்கள். யாரை கேட்டாலும் சித்ரா ஒரு துணிச்சலான பெண், சித்ரா ஒரு போராளி, சித்ரா கோழை அல்ல, சித்ரா அன்பானவள், சித்ரா உழைப்புக்கு முதன்மை தருபவர், சித்ரா ஒரு இலட்சியப் பெண் என்ற பலவாறாகப் புகழாரம் சூட்டி மகிழ்கிறார்கள்.

சித்ரா என்றாலே நேர்மறை என்று சொல்லும் அளவுக்கு அவரைப் பற்றின செய்திகள் இந்தக் கிழமை முழுக்க உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சித்ரா ஆசைப்பட்டது எதுவுமே நடக்கலையே என்று அவரது கொண்டாடிகளும், நண்பர்களும் கண்ணீரப் பதிவுகளை இணையத்தில் இறைத்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியிலேயே சிறந்த நடிகைக்கான விருது வாங்கறதுதான் சித்ராவின் பெரிய ஆசையா இருந்துச்சாம், தனக்கான கொண்டாடிகளைச் சம்பாதித்து வைத்ததுதான் என் மிகப்பெரிய சொத்து என்று சித்ரா சொல்வராம். அதனால், முகம் தெரியாத எத்தனையோ கொண்டாடிகள் வீட்டுக்கு அவர்களுக்கே தெரியாமல் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாராம் சித்ரா. இப்படித் தன்னை கவர்ந்த கொண்டாடிகளை, தன்னுடைய திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்பது சித்ராவின் இரண்டாவது ஆசையாம். அவர்களுக்கு ஒரு விருந்தும் தர வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லி கொண்டே இருந்தாராம். கடைசியில் அதுவும் நடக்கவில்லை. 

நடிகர் விஜய்யின் தீவிரமான விசிறியான சித்ரா, விஜய்யை என்னுடைய திருமணத்திற்கு உறுதியாக அழைப்பேன் என்றும், அதனால்தான் அவரை இன்னும் பார்க்க கூட முயற்சி செய்யவில்லை என்றும் தனது மூன்றாவது ஆசையை ஒரு காணொளியில் சித்ரா தெரிவித்துள்ளார். இந்தக் காணொளியை சித்ரா கொண்டாடிகள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த ஆசையும் சித்ராவுக்கு நிறைவேறவில்லை. 

ஹேமந்த்துடன் சித்ராவுக்கு உறுதிப்பாடு நடந்தபோது, எல்லா நண்பர்களையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்க முடியவில்லையாம். இதை பற்றி கேட்ட நட்பு வட்டாரத்தில், கண்டிப்பாகத் திருமணத்திற்கு அழைக்கிறேன் என்று சொல்லி இருந்திருக்கிறார். இவர்கள் எல்லாரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்றுதான், ஹேமந்திடம் இறப்பதற்கு முந்தைய நாட்களில் கேட்டு வந்துள்ளார் சித்ரா. 

ஆனால் ஒற்றைப் பதிவுத் திருமணத்தில், சித்ராவின் மூன்று ஆசைகளுக்கும் முடிவுரை எழுதிவிட்டார், அடாவடிக் கணவராக ஹேமந்த். சித்ராவிற்கு எந்தவித ஒத்துழைப்பையும் தராமல் இருந்துள்ளார். இப்படி, தான் ஆசைப்பட்டது எதுவுமே நிறைவேறாமலேயே சித்ராவின் உயிர் பிரிந்துள்ளது!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.