Show all

‘உணவுக்கு மதம் இல்லை’ இதுவே எங்கள் மதம்! சோமாட்டோ உணவு நிறுவனம் பெருமிதம்.

எனக்கு ஒரு ஹிந்துதான் உணவு கொண்டு வந்து கொடுக்க  வேண்டும் என கேட்ட வாடிக்கையாளருக்கு சோமாட்டோ கொடுத்த, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற ஒரு இனிய விடை: ‘உணவுக்கு மதம் இல்லை’ இதுவே எங்கள் மதம்!

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  தனக்கு ஒரு ஹிந்து தான் உணவைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என கேட்ட வாடிக்கையாளர்களுக்கு, சோமாட்டோ உணவு நிறுவனம் கொடுத்த விடை, இணையத்தில் பாராட்டு பெற்று வருகிறது.

வட இந்தியாவை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் தனது செல்பேசியில் உள்ள சோமாட்டோ செயலி மூலம் உணவு ஒன்றை அனுப்ப விண்ணப்பித்துள்ளார். அவர் கேட்ட உணவை கடையில் இருந்து எடுத்து அவர் இருக்கும் இடத்திற்கு கொண்டு வரும் ஒரு நபரை அந்நிறுவனம் நியமித்து அந்தத் தகவலை அமித் சுக்லாவிற்கு அனுப்பியது. 

உணவு கொண்டு வந்து தர நியமிக்கப்பட்ட நபர் ஹிந்து மதத்தை சாராதவர் என்பதை அவரது பெயரின் மூலம் தெரிந்து கொண்ட அமித், தனக்கு உணவு கொண்டு வருபவர் ஹிந்து இல்லை என்பதால் அவரை மாற்றி ஒரு ஹிந்துவிற்கு இந்தப் பணியை ஒதுக்கிட வேண்டும் என அவர் சோமாட்டோ நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்நிறுவனம் இதை ஏற்க மறுத்துவிட்டது. 

இதனால் அந்த உணவுக்கேட்பை இரத்து செய்து, அதற்காக தான் செலுத்திய கட்டணத்தையும் திரும்ப பெறாமல் இருந்துவிட்டார் அமித். அதை அவர் தனது கீச்சுவில் பதிவாக வெளியிட்டிருந்தார். அதற்கு சோமாட்டோ நிறுவனம்: ‘உணவுக்கு மதம் இல்லை’ இதுவே எங்கள் மதம்! என்று விடையளித்து சோமாட்டோ உணவு நிறுவனம் பெருமிதம் கொண்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,230.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.