Show all

பணமதிப்பிழப்பு தந்த சோகமாம்! காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை மரணம்.

பணமதிப்பிழப்பால் பாதித்த, செய்தியாகாத, தொழில் அதிபர்கள், நிறுவனங்கள் ஏராளம். காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்திற்கு காரணம் பணமதிப்பிழப்பு என்கிற ஒரு செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது. 


15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல்நாள் மாலை காணாமல் போன அவர், நேற்று முழுக்க மங்களூர் அருகே நேத்ராவதி ஆற்றில் தேடப்பட்டு வந்தார். ஆனால் நேற்று இரவு முழுக்க அவரின் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை இவரின் உடல் மீனவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.  

காபி டே நிறுவனர் சித்தார்த்தா பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்ததாகவும், அதிக வரி நெருக்கடியால் சிரமப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. சித்தார்த்தா மரணத்திற்கு பொருளாதார பிரச்சனையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார். இந்த தொடர் நிதி பிரச்சனை அவரை மொத்தமாக முடக்கி போட்டது. இதுதான் இவரை தற்கொலைக்குத் தூண்டியது. ஆனாலும் மோடியின், பணமதிப்பிழப்பு நடவடிக்கையே இவரின் வணிகத்தில் பெரிய சிக்கலை தோற்றுவித்ததாம். 

மோடியால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்ட பின் இவருடைய வணிகம் மொத்தமாக படுத்து இருக்கிறது. அந்த கால கட்டத்தில்தான் இவர் தன்னுடைய சொத்துக்களை அதிகம் விற்றார். அப்போதுதான் பங்குகளில் இவருக்கு நிறைய பிரச்சனை வந்துள்ளது

அதன்பின் கொஞ்சம் நிலைமை சரியான பின், மீண்டும் காபி டே கொஞ்சம் மேலே வர தொடங்கி உள்ளது. ஆனால் அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகளால் இவர் தொடர்ந்து குறி வைக்கப்பட்டார். இவர் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து பலமுறை சோதனை நடந்தது. 

நடுவண் அரசில் இருந்தும் இவருக்கு எதிராக அழுத்தம் வந்தது. அதேபோல் இவர் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக புகாரும் வைக்கப்பட்டது. அதோடு இவரின் 150 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் முடக்கம் செய்யப்பட்டதும் பிரச்சனை ஆனது. இந்த சிக்கல்தான் இவரின் தற்கொலைக்கு முதன்மையான காரணம் என்று கூறுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,230.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.