இந்தியாவின் முன்னணி பணப்பை மற்றும் 'மின்-வணிகங்கள்' இணைப்பு நிறுவனமான பேடிஎம் தனது நிறுவனத்தில் பணந்திரும்பும் வாய்ப்புகளில் ஊழியர்களும்- வணிகர்களும் இணைந்து ஈடுபட்ட மோசடியை வெளிக் கொணர்ந்துள்ளது. 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் முன்னணி பணப்பை நிறுவனமான பேடிஎம் வழங்கிய பணந்திரும்பு வாய்ப்புகளில் பல மோசடிகள் நடந்துள்ளதாகவும், அந்த தொகையளவு 5-10 கோடி வரை இருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து பேடிஎம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தணிக்கைக்கு முடிந்த கணக்குகளை மீண்டும் ஆழ்ந்த தணிக்கைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், இந்தத் தணிக்கையில் பல ஊழியர்கள் வியாபாரிகளுடன் இணைந்து கூட்டு வைத்திருந்ததும், இவர்கள் அனைவரும் கூட்டு களவாணிகளாக களாவாடியதும் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் ரூ10 கோடி வரையில் மோசடி செய்து இருக்கலாம் என்றும் தெரிகிறதாம். எண்ணிம மயமாக்கல் என்பது மிகச் சிலரின் தொழில் நுட்ப அறிவில் இயங்கும் தளமாக இருக்கின்ற காரணத்தால், தமிழ்ராக்கர்ஸ், நமது கடனட்டை ஆதாய அட்டை இல்லாமல் நமது கணக்கில் இருந்து பணம் எடுப்பது, நமக்கு வரவேண்டிய பணந்திரும்பும் வாய்ப்பை நிறுவன ஊழியர்கள் ஆட்டையப் போடுவது, இணையத்தளங்களை முடக்குவது, செல்பேசிகளில் கிருமிகளை ஏற்றுவது, இப்படி ஆயிரம் சுழியம் குற்றங்கள் (இந்த வகையான குற்றங்களை அரசுகள் சுழியம் குற்றங்கள் என்ற தலைப்பில் தான் வகை படுத்துகின்றன.) என்று நிறைய மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அவைகளிலேயே இந்த பணந்திரும்பும் வாய்ப்பில் ஆட்டையைப் போடுவது, கேட்பாரும், மேய்ப்பாரும் இல்லாமல் சொகுசான திருட்டாக இருக்கிறது. இத்தனையெல்லாம் வாய்ப்பிருக்கும் போது, நாம் ஒருகட்சிக்கு வாக்களித்தால் இன்னொரு கட்சிக்கு வாக்கு விழும், ஆளும் அரசே ஈடுபட வாய்ப்புள்ள, சுழியம் குற்றத்திற்கு மட்டும், வாய்ப்பேயில்லை என்கிறது நம்முடைய தேர்தல் ஆணையம். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் என்பார்கள் ; சரியாக இன்றோடு சேர்த்து இன்னும் எட்டு நாளில் தெரிந்து விடும். ஒருகட்சிக்கு வாக்களித்தால் இன்னொரு கட்சிக்கு வாக்கு விழும், முறைகேடு நடந்ததா இல்லையா என்று. தமிழகத்தில், நோட்டாவிடமே வெற்றி கொள்ள முடியாத பாஜக ஒற்றைத் தொகுதியில் வெற்றி அடைந்தாலும், முறைகேடு நடந்திருப்பது உறுதியாகி விடும். பணந்திரும்பும் மோசடிக்கு மீண்டும் வருவோம்! பணந்திரும்பும் வாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஆர்வத்தில், பொருளை வாங்கியவர்கள் பணம் கிடைக்காமல் நிறையவே ஏமாந்துள்ளனர். சிலர் தங்களது செயலிகளின் பணப்பையில் பணம் வந்துவிட்டதா என்றும் திரும்ப பார்த்து தங்களது செல்பேசி தேய்ந்து போனதுதான் மிச்சம பேடிஎம் நிறுவனத்தில் வேலை செய்த மோசடியில் ஈடுபட்ட 10 ஊழியர்களும், 100க்கு மேற்பட்ட வணிகர்களும் இந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனராம். பேடிஎம்மின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஜய்சேகர் சர்மா எதிர் காலத்தில் இது போன்று நடக்காமல் கவனமாக இருப்போம் என்று தெரிவிக்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,154.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



