விடுதலை பெற்ற முதல் தீவிரவாதி ஹிந்து என்கிறார் கமல். அதற்கு மறுப்பாக மோடி சொன்னது: 'ஹிந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது. தீவிரவாதி ஹிந்துவாக இருக்க முடியாது' என்பது. கரம்சந்த் காந்தியைச் சுட்டுக் கொன்றதால், தூக்கிலிடப் பட்ட நாதுராம் கோட்சே ஹிந்து இல்லை என்கிறாரா மோடி. ஹிந்துதான் என்கிறார் மோடி. எப்படி? மனுவில் தேடினால்தான் கிடைக்கும் விடை. 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தற்போதைய நிலையில் தீவிரவாதம் உலகின் மூல முதல் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்த வரை தீவிரவாதம் குறித்து பேசுவதை தங்கள் தேர்தல் கருத்துப் பரப்புதல் யுக்தியாக பாஜக மட்டும் முன்னெடுத்து வருகிறது. சென்னையில் மாணவிகளிடம் பேசும் போது: அதிகாரத்தை பகர்ந்தளிப்பதுதான் தீவிரவாதத்திற்கான தீர்வு என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க விடையைத் தருகிறார் ராகுல்காந்தி. பாஜக குறிப்பிடும் தீவிரவாதம்: இந்தியாவில் நாட்டை துண்டாட விரும்பும் எந்த இயக்கத்திற்கும் பாகிஸ்தான் ஒத்துழைத்து வருகிறது. காஷ்மீரில் நடத்தப் பெறும் தீவிரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான் பின்புலமாக இருக்கிறது. பாஜகவிற்கு எதிராக கருத்தை முன்வைக்கிற யாரும் அவர்களாகப் பேசுவதில்லை; அவர்கள் பேச்சுக்குப் பின்னால் பாகிஸ்தானின் தூண்டுதல் இருக்கிறது. எனவே இந்தியாவில், பாஜக அல்லாத, காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் பாஜகவை எதிர்க்கும் எண்ணம் தோன்றுமேயானால் அது பாகிஸ்தானின் சதி. பாஜகவை எதிர்க்கிற யாரையும் எப்போது வேண்டுமானலும் தீவிரவாதி என்று முத்திரை குத்துவதற்கு தோதாக, 'தீவிரவாதம்' என்பதற்கு இப்படியானதொரு வரையறை வடிவமைத்து வைத்துக் கொண்டு பாஜகவை இந்தியாவில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது பாஜக. இந்தியாவில் தீவிரவாதத்தால் மாண்டுபோனவர்கள் பாஜகவில் யாரும் இல்லை. காங்கிரசில் முதலாவது நபர் கரம்சந்த் காந்தி, இரண்டாவது நபர் இந்திராகாந்தி, மூன்றாவது நபர் இராஜிவ் காந்தி. இந்த மூன்று பேர் இறப்பிற்கு பின்னால் பாகிஸ்தான் இல்லை. பாகிஸ்தானின் மதமும் இல்லை. அப்படியானால் முதல் தீவிரவாத பலியாளர் கரம்சந்த் காந்தியில் இருந்து ஆய்வைத் தொடங்குவோமே என்று முயல்கிறார் கமல். அவருக்கு கிடைத்த விடை! நாதுராம் கோட்சே; நாதுராம் கேட்சே ஹிந்து; அப்படியானல் எந்த அடிப்படையில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது? இந்த ஆய்வை பாஜகவிற்கு முற்றுகையாக முன்னெடுக்கிறார் அரவங்குறிச்சியில் கமல். அடிவேரையே ஆட்டம் காணவைத்துவிடுவார் போலவே, கமல்;. புரிந்து கொண்டது பாஜக விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தீவிரவாதப் படுகொலை: கரம்சந்த் காந்தி கொல்லப்பட்டது. கொன்றவர் நாதுராம் கோட்சே. அவர் ஹிந்து பாஜக பயப்படுத்திக் கொண்டிருக்கிற பாகிஸ்தானும் இல்லை; பாகிஸ்தானின் மதமும் இல்லையே இது கமலின் ஐயம். கமலுக்கு மோடியின் விடை: ஹிந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது. தீவிரவாதி ஹிந்துவாக இருக்க முடியாது. என்ன சொல்கிறார் மோடி? நாதுராம் கோட்சே தீவிரவாதி இல்லை என்கிறாரா? நாதுராம் கோட்சே ஹிந்து இல்லை என்கிறாரா? புரியவில்லைதானே? மோடியின் பதிலை தெளிவாகப் புரிந்து கொள்ள ஹிந்துத்துவாவின் அடிப்படை சட்டமான மனுநீதியில் தேட விடை கிடைக்கிறது. பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராம்மனன்;. காலில் பிறந்தவன் சூத்திரன். சூத்திரன் செய்யும் எந்தத் தவறும், பிராம்மனன் செய்தால் தவறாகாது என்கிறது மனுநீதி. அது வதம் என்கின்றன ஆரியர் தொன்மங்கள். நாதுராம் கோட்சே ஹிந்து என்பது உண்மைதான். அவர் கரம்சந்த் காந்தியைச் சுட்டது உண்மைதான். ஆனால் அது தீவிரவாதம் இல்லை. வதம். என்பதுதான் மோடியின் கூற்று. மோடியின் அடிப்படை எங்கே எப்படியிருக்கிறது புரிகிறதா? ஒரு இயங்கலை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில்: கமல் பேச்சு குறித்த கேள்விக்கு மோடி தெரித்திருக்கிற 'ஹிந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது. தீவிரவாதி ஹிந்துவாக இருக்க முடியாது' என்ற பதில் ஏற்புடையாதா? என்ற கருத்துக் கணிப்பில் எழுபது விழுக்காட்டினர் ஏற்புடையது இல்லை யென்றும், இருபது விழுக்காட்டினர் ஏற்புடையது என்றும், பத்து விழுக்காட்டினர் கருத்து இல்லை யென்றும் வாக்களித்திருக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,155.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



