இந்த ஆண்டு கடுமையான வெப்பமும், நீர்ப்பற்றாக்குறையுள்ள நிலையில், சிக்கன நடவடிக்கையாக, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அரிகரன் பரிந்துரைக்கிறார் ஓர் சிக்கன நடவடிக்கை. அது சரி! அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆயிரம் வழிகளைத் தேடும் அரசு: தேர்தலில் வாக்களிக்க வேண்டி பணத்தை தண்ணீராக செலவளிக்கும் அரசு: தண்ணீருக்காக கொஞ்சம் முயற்சி செய்யக்கூடாதா? தண்ணீரை வீட்டுக்கு வீடு விநியோகம் செய்ய சில நூறு வழிகளை கண்டறியலாமே. 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அரிகரன் அவர்களின் பரிந்துரை இதுதான்: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் சேமிப்பு கரைந்து போனது. தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி, புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது. ஆனாலோ பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன் லிட்டர் அன்றாடம் தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தூவானக்; குளியலை மிகவும் விரும்புகின்றனர். அதேபோல் மேற்கத்திய கழிப்பிடப் பயன்பாட்டிற்கு 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை கழிப்பறைகளை பயன்படுத்தும்போது 1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும். எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை மேற்கத்திய கழிப்பிடப் பயன்பாட்டிற்கு சற்று ஓய்வு தர வேண்டும். சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி சிலர் தங்கள் கார்களை அன்றாடம் கழுவுகின்றனர். இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. சிலர் நூறு லிட்டர் வரை பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம். வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும், வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார். நமக்கு சொன்னது போலவே அரசுக்கும், சில அலோசனைகளை சொல்ல தனது அலுவலக குளுகுளு அறையில் அமர்ந்து யோசிக்கலாமே: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அரிகரன் அவர்களே! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,154.
தூவானக்; குளியலில் 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் வாளியில் தண்ணீர் பிடித்து குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை தூவானக்; குளியலைத் தவிர்க்க வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



