11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னா. இவர் நேற்று விஜயபுரா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'நாட்டில் உள்ள அறிவுஜீவிகளும், முற்போக்குவாதிகளும் தேசவிரோதிகள். இந்த நாட்டில் அறிவுஜீவிகள் வாழ்ந்து கொண்டு, நாம் செலுத்தும் வரியில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். பின் நம்முடைய நாட்டுக்கு எதிராகவே முழக்கங்களை எழுப்புகிறார்கள். இதுபோன்ற மனிதர்களிடம் இருந்து தேசம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறது. நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், இந்த அறிவு ஜீவிகளை எல்லாம் சுட்டுக்கொல்வதற்கு உத்தரவிடுவேன் என்று பேசினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,861.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



