11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் 'விஸ்வரூபம்-2' படத்தின் பட விளம்பரம் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், பட வெளியீட்டுக்கு இன்னும் பதின்மூன்று நாட்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒழுங்கமைப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து சாதி மதம் என்ற பாடல் இசைத்த காணொளி இன்று வெளியிடப் பட்டது. கமல்ஹாசன் எழுதிய இந்தப் பாடலை சத்யபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான நானாகிய நதிமூலமே, ஞாபகம் வருகிறதா உள்ளிட்ட 2 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,861.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



