Show all

அரசியலில் மீண்டும் முழுமூச்சுடன் களம் காண்பார் கருணாநிதி: வைகோ

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரொம்ப காலம் பகையாய் தள்ளியிருந்து விட்டு, பாவம் அவர் பிழை இதில் என்ன இருக்க முடியும் என்று சிலருடன் மீண்டும் நாமாகச் சென்று இணைவதுண்டு; அப்போது நாம் கொஞ்சம் கூடுதலாகத் தான் ஒட்டி உரசி விடுவோம்; அப்புறம், அடச்சே நாமா இப்படி என்று நம்மை கடிந்து கொள்வோம். அப்படித்தான் இருக்கிறது வைகோவின் திமுகவுடனான நெருக்கம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வந்தது. அதனால் அவரைக் காண்பதற்காக திருச்சியில் இருந்து அவசரமாக சென்னை வந்தேன்.

ஆனால், இங்கு வந்து பார்த்தபோது கருணாநிதி உடல் நிலை முற்றிலும் நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை நேரில் சென்று பார்த்தால் அவருக்கு நோய் தொற்று ஏற்படும் என்ற காரணத்தால் அவரை நேரில் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. கருணாநிதி விரைவில் உடல் நலம்பெற்று, தமிழக அரசியலில் மீண்டும் முழுமூச்சுடன் களம் காண்பார் என்று  வைகோ தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மூப்பு அடைந்து விட்டார்; அவர் பொறுப்புக்கு அவரின் அரசியல் வாரிசு ஸ்டாலின் அவர்களைப் நியமித்து விட்டார். இனி கலைஞர் அவர்கள் முழுக்க முழுக்க ஓய்வில் இருக்க வேண்டியவர்.

பாவம் அவர் ஓய்வில் இருக்கட்டும் விட்டு விடுங்கள் வைகோ. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.