தனியார் வங்கிகளில் வைப்பு செய்துள்ள பணத்தை எல்லாம் மொத்தமாக வெளியே எடுக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி வேண்டுகோள். 30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: யெஸ் வங்கி சிக்கலுக்குப் பிறகு மாநில அரசுகள் தங்களது உள்ளூர் அரசு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தனியார் வங்கிகளில் உள்ள மாநில அரசுக்குச் சொந்தமான வைப்புப் பணத்தை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றுமாறு. ஆனாலும் தனியார் வங்கிகளில் வைப்பு செய்துள்ள பணத்தை எல்லாம் மொத்தமாக வெளியே எடுக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலச் செயலாளர்களுக்கும் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி கடிதம் எழுதியுள்ளது. தற்போதைய சூழலின் காரணமாக தனியார் வங்கிகளிலிருந்து மாநில அரசுகள் தங்களது வைப்புப் பணத்தை வெளியே எடுத்தால் அது வங்கி மற்றும் நிதிசார் துறைகளைக் கணிசமாகப் பாதிக்கும் என்று இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



