Show all

ஆம் பீகாரில்! கொத்து கொத்தாக குழந்தைகள் மடிந்ததற்கு வெறுமனே மூளைக்காய்சல் என்று தலைப்பிட்டு விட முடியாது.

குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச் சத்துக்குறைபாடு இருந்திருக்கக் கூடும். அதுதான் இத்தனை குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டது. என்பதை உறுதிப் பட தெரிவிக்கின்றனர் தமிழக மருத்துவர்கள். ஆகவே பீகாரின் கொத்து கொத்தாக மடிந்த குழந்தைகள் மரணத்தை வெறுமனே மூளைக்காய்சல் என்று தலைப்பிட்டு விட முடியாது.

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் சிறிகிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளன.

முதல்வர் நிதிஷ்குமார், தொடர் உயிரிழப்புக்கள் குறித்து தெரிவிக்கும் போது, நோய் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படாததே நோய் தீவிரமடைய காரணம் என தெரிவித்துள்ளார். அவருக்கு ரொம்ப விழிப்புணர்வு இருப்பது போல. பீகாரில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு தங்கள் குழந்தைகளை பலி கொடுத்தவர்கள் அனைவரும் ஏழை மக்கள்; குழந்தைகளை பராமரிக்க நேரம் இல்லாதவர்கள்; அருகில் விளைகிற லிச்சிப் பழங்களை பறித்துண்டு, குழந்தைகள் பசியாற்றுவதற்கு மாற்று தேட முடியாதவர்கள். 

பீகார் இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். பிகார் முற்காலத்தில் மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.

பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

பீகாரில் கிராமப்புறங்களில் 88.71 விழுக்காடு மக்களும், நகரப்புறங்களில் 11.29 விழுக்காடு மக்களும் வாழ்கின்றனர்.
பீகாரிலுள்ள பல மாவட்டங்களில் உள்ள குழந்தைகளின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகக் குறைவாக இருப்பதும், அதுதான் மூளைக் காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் மரணத்துக்கும் காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நேரத்தில், முசாபர்பூரில் இந்த பருவத்தில் அதிகமாக விளைகிற லிச்சிப் பழங்கள்கூட, குழந்தைகளின் மூளைக் காய்ச்சலுக்குக் காரணமாக இருக்கலாம் என சில ஆய்வுகள் சந்தேகப்படுகின்றன. 

மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டுமென்றால், வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருங்கள். முதன்மையாக கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுங்கள். கோடைக்காலத்தில் வந்திருப்பதால், நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க நீராகாரங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைக் குழந்தைகளுக்கு அதிகம் கொடுங்கள். இந்தப் பிரச்சனை சத்துக்குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடு உள்ள குழந்தைகளைத்தான் தாக்கும. ஆரோக்கியமான குழந்தைகளை அண்டாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்கிறார்கள் தமிழக குழந்தைகள் நல மருத்துவர்கள். 

வடஇந்தியா அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்வதில் இருக்கிற ஆர்வம், மக்களை காப்பதில் இல்லை என்பது இந்தச்சோகம், நமக்கு உணர்த்தும் செய்தியாகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,186.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.