இன்னும் ஐந்து நாட்களேயுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் இருவர் குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவர் மதுமிதா முன்பே அறிவோம். 02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது விஜய் தொலைக்காட்சி. இதையடுத்து இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவது யார் யாரோ? என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடிகை மதுமிதா கலந்து கொள்ள இருப்பது முன்பே உறுதியானது. இந்நிலையில் தற்போது பாடகர் மற்றும் நடிகரான மோகன் வைத்யா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொண்ட நிலையில் இம்முறையும் ஒரு பாடகரை களமிறக்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,186.
பாடகர் மோகன் வைத்யா, அந்நியன், சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் மற்ற போட்டியாளர்களின் பட்டியலை விஜய் தொலைக்காட்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.