Show all

மோடியின் அடுத்த அதிரடி! 40இலட்சம் தொழிலாளர்களுக்கு ஆப்பு!! 3-5 ஆண்டுகளில், பெட்ரோல், டீசல் 2, 3 சக்கர வாகனங்களுக்குத் தடை.

மூன்றுலிருந்து ஐந்து ஆண்டுகளில், முற்றாக பெட்ரோல் டீசல் 2, 3 சக்கர வாகனங்களக்கு மூடுவிழா கொண்டாடி, 40இலட்சம் தொழிலாளர்களுக்கு ஆப்பு வைக்க மின்-வகனச் சட்டத்தை முன்னெடுக்க விருக்கிறதாம் மோடி அரசு.

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மூன்று சக்கர வாகனங்களுக்கு தடை போட திட்டமிட்டிருக்கிறது மீண்டும் பதவியேற்றுள்ள மோடி அரசு. அதே போல 150 சிசிக்கு உட்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கும் முழுமையான தடை வருகிறது. பெட்ரோல் டீசல் வாகன ஒழிப்பிற்கு மூன்று ஆண்டுகள், 150 சிசிக்கு உட்பட்ட இரு சக்கர வாகன ஒழிப்பிற்கு ஐந்து ஆண்டுகள் அவகாசமாம். 

அதற்கு பதிலாக மின்சக்தி வண்டிகள்தாம் இயங்க வேண்டுமாம். இப்படி ஒரு திட்டம்  கொண்டு வர இருப்பதைத் தெரிந்து கொண்ட உடனேயே பஜாஜ் மற்றும் டிவிஎஸ் தங்கள் தரப்பு சிரமங்களைச் சொல்லி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். 
இப்படி தடாலடியாக அரசு, வாகனத்துறையில் மின்-வாகனச் சட்டத்தைக் கொண்டு வர நினைப்பது, மக்களுக்கு மட்டுமல்ல சிரமம், ஒட்டு மொத்த இந்திய ஆட்டோமோபைல் துறையையே தடம் புரட்டிவிடும். ஆட்டோமோபைல் துறையை நம்பி இருக்கும் 40 லட்சம் ஊழியர்களின் வேலைகள் முழுமையாக பறி போகும் என கள எதார்த்தத்தை போட்டு உடைத்திருக்கிறார் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு.சீனிவாசன். 

இந்தியாவில் மின்சார வாகனங்கள் முன்னெடுக்கப் படலாம்;, ஆனால் அந்த மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்போது தான் மாற்றத்தினால் ஏற்படும் லாப நட்டங்களைச் சரிகட்ட முடியும். அதோடு இந்த மாற்றம் நிலையானதாகவும், நீண்ட நாட்களுக்கு இந்த தொழில்நுட்ப மாற்றத்தைப் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார் வேணசீனிவாசன்.   

ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் துறை பாரத் ஸ்டேஜ் 6-க்காக நிறைய செலவு பண்ணி இருக்கோம். வெறும் பாரத் ஸ்டேஜ் 6 வாகனங்களத் தான் இனி விக்கணும். இதுக்கே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு பண்ணி இப்ப தான் உற்பத்தி ஆலைகளை எல்லாம் மாத்தி அமைச்சோம். இப்ப வந்து திடீர்ன்னு மின்-வாகனம் மட்டும் தாம் விக்கணுமுன்னு சொன்னா போட்ட காச எப்பங்க எடுக்குறது 

மேலும் திடீருன்னு மின்-வாகனம் சட்டம் கொண்டு வந்தா என்னங்க செய்யுறது? இந்திய ஆட்டோமொபைல் துறையில் நமக்கு நல்ல அனுபவமோ அல்லது மின்-வாகனங்களுக்கான தேவையோ இப்போதைக்கு இல்லை. 

ஆட்டோக்களில் இயற்கை எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கே இங்கு போதுமான எரிவாயு நிரப்பும் பங்குகள் இல்லை. இது தான் இந்திய ஆட்டோமொபைல்களின் நிலை.

இப்படி இந்தியாவில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இயற்கை எரிவாயுவை நிரப்பவே போதுமான வசதிகள் இல்லாத போது, அன்றாடம் மின்சாரத்தில் இயங்கப் போகும் வாகனங்களுக்கு போதுமான மின்னேற்ற நிலையங்கள் இல்லாமல் அடுத்த 3 - 5 ஆண்டுகளில் அனைத்தையும் மின்-வாகனங்களாக மாற்றப் போகிறார்கள் என்றால், எப்படி விற்க முடியும் என இயல்பை தெரிவித்திருக்கிறது பஜாஜ் நிறுவனம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,186.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.