நமது இந்திய அரசு மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவத் துறைகளையும் அதன் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கொண்டு ஆயுஷ் என்ற அமைச்சகத்தையும், ஒரு அமைச்சரையும் கொண்டுள்ளது. 23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உணவே மருந்து மருந்தே உணவு என்றவாறு இயற்கை சார்ந்தது நமது சித்த மருத்துவம். அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் பிண்டத்தில் இருப்பது அண்டத்தில் என்ற கருத்தியலை உயிர் தோற்றக் கொள்கையாகக் கொண்டது தமிழ்மெய்யியல். பாரம்பரிய சித்த மருத்துவர்கள் நம்மிடம் உடம்புக்கு என்ன என்று கேட்க மாட்டார்கள். அவர்களே நாடி பிடித்துப் பார்த்து மருந்து தருவார்கள். நாடி பிடித்துப் பார்ப்பதில் அவர்கள் கண்டு கொள்வது அண்டத்தில் இருக்கிற நீர் தீ காற்று இவை மூன்றில் நிலமாகிய நமது உடம்பில் எது தூக்கலாக இருக்கிறது அல்லது எது பற்றாக்குறையாக இருக்கிறது என்று கண்டு பிடிப்பதுதான். அவற்றை தெரிவிப்பதற்கான மூன்று நாடிகள் நமது மணிக்கட்டில் ஓடுகிறது. அதனைக் கண்டு பிடிப்பதற்கு நமது மணிக்கட்டில் மருத்துவரின் சுண்டு விரல் பெருவிரல் தவிர்த்த மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரலைப் பயன்படுத்துவார்கள். நாம் உண்ணுகிற அத்தனைப் பொருள்களையும் நீர் நிறைந்தது, தீ நிறைந்தது, காற்று நிறைந்தது என்று பட்டியல் படுத்தி வைத்திருக்கின்றார்கள். உணவில் மாற்றம், பத்தியம், அந்த மூன்று குணம் தருகிற மூலிகைகள் மற்றும் நிலத்தில் தோண்டியெடுக்கப் படும் சில நச்சுக்களை மருந்தாகப் பயன்படுத்தி எந்த நோயை வேண்டுமானலும் தீர்த்து வந்தார்கள். அவர்களுக்கு நோயின் பெயர் குறித்தெல்லாம் கவலையில்லை. அந்த நோயைக் கொண்டு வருகிற நுண்ணுயிரிகள் குறித்தெல்லாம் கவலையில்லை. நாம் பாரம்பரிய மருத்துவர்களுக்கு தங்கள் ஆற்றலை நடப்பு நிலைக்கு உயர்த்திக் கொள்ள கல்வியில் வாய்ப்பும், இடஒதுக்கீடும் தராமல், அல்லோபதி மருத்துவத்தைத் தூக்கிப் பிடித்து அவர்களையெல்லாம் போலி மருத்துவர்கள் என்று அடையாளப்படுத்தத் தொடங்கி விட்டோம். நமது இந்திய அரசு மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவத் துறைகளையும் அதன் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கொண்டு ஆயுஷ் என்ற அமைச்சகத்தையும், ஒரு அமைச்சரையும் கொண்டுள்ளது. இந்த மாற்று மருத்துவத் துறைகளுக்கு இந்தியா ஓர் அமைச்சகத்தையே கொண்டிருக்கிற நிலைக்கு, அந்தந்த மருத்துவ முறைகள் கெத்தானவைகளா என்றால், ஆம்! கெத்தானவைகள் தாம். ஆனால் அந்தத் துறைகள் மூலம் வாழ்வாதரம் பெற்றிருக்கிற வல்லுநர்கள், மருத்துவர்கள் அந்த மருத்துவத்தை தூக்கி நிறுத்திக் கொண்டாடி கொத்தை தங்களுக்கும் நிறுவிக் கொள்கிறவர்களாக இல்லை யென்பது மறுக்க முடியாத உண்மை. இதனால்தான் உலகமே கொரோனாவில் அல்லாடிக் கொண்டிருக்கிற நிலையில், எங்களில் இருக்கிறார் ஒரு போதிதர்மர் என்று கெத்து காட்ட வில்லை ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து யாரும். மாறாக கொரோனாவைக் குணப்படுத்த இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவத்தில் இந்நோயை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பொது நல மனுவைத் பதிகை செய்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த அறங்கூற்றுவர்கள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, நடுவண் மற்றும் மாநில நலங்குத் துறை செயலாளர்களும், ஆயுஷ் அமைச்சக செயலாளரும், நடுவண் சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகமும் நான்கு கிழமைகளில் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டது. இந்த அடிப்படையில் அடுத்த நாள் காலையிலேயே மாற்று மருத்துவத் துறை சிறப்பாளர்களை அழைத்து, அவர்களுடன்- இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி- அவர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தினார். சித்த மருத்துவத்தின் சார்பாக, டெங்குவுக்கு தமிழகத்தில் நிலவேம்பு குடிநீர் முன்னெடுக்கப்பட்டது போல, கெரோனாவிற்கு கபசுரகுடிநீர் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனாவிற்கு மருந்தாக தெரிவிக்க அந்தத் துறையினருக்கு துணிச்சல் இல்லை. மாறக எதிர்ப்பாற்றலைக் கொடுக்க அல்லோபதிக்கு துணைமருந்தாக முன்மொழிந்திருக்கின்றார்கள். அடுத்து ஓமியோபதிக்கு வருவோம். இந்த மருத்துவ முறை ஜெர்மானிய அல்லோபதி மருத்துவர் ஹானிமென் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு அல்லோபதி மருந்தும் பக்கவிளைவுகளால் வேறு ஒரு புதிய நோயுக்கு காரணமாகின்றன என்ற காரணத்தால் பக்க விளைவு இல்லாத ஓமியோபதி மருத்துவத்தை உருவாக்கித் தந்தார்கள் மருத்துவர் ஹானிமென் அவர்கள். ஓமியோபதி மருத்துவத்திற்கும் நோயின் பெயர்கள் தேவையே இல்லை. நோயாளிக்கு இருக்கிற குறிகளுக்குத்தாம் மருந்து. இந்த மருத்துவ முறையும் காலத்தை எதிர்த்து எந்த நோயையையும்- நோயை உருவாக்கிய நுண்ணுயிரி பற்றியோ, நோயின் பெயரைப் பற்றியோ கவலை கொள்ளாமல் வெற்றி கொள்ள முடியும். ஆயுஷ் அமைச்சகத்தில் ஓமியோபதியில் கொரோனாவிற்கு ஆர்சனிக் ஆல்பம்30 முன்மொழியப்; பட்டது. ஆனால் நோயின் பெயரை வைத்து பொதுவான மருந்தாக ஆர்சனிக் ஆல்பம்30 ஓமியோபதியில் எப்படி முன்மொழியலாம் என்று அந்தத் துறை சார்ந்த மருத்துவர்களே கேள்வியெழுப்பி வருகின்றனர். காரணம்:- மருத்துவத்திற்குக் கெத்து இருக்கிறது. ஆனால் மருத்துவர்களுக்குக் கெத்து இல்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



