Show all

கொரோனா- இந்தியப் புள்ளிவிவரத்தால் அதிர்ச்சி! பாதிப்பவர்கள் அகவை மிகுந்தவர்கள் இல்லையாம்

அகவை மிகுந்தவர்களை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் என கூறி வரும் நிலையில், இந்தியாவில் மாறுபாட்டு நிலை காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகவை மிகுந்தவர்களை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் என கூறி வரும் நிலையில், இந்தியாவில் மாறுபாட்டு நிலை காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடுவண் நலங்குத்துறை அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் அகவை விபரங்களை வெளியிட்டார்.

கொரோனா தொற்றால் பாதித்தவர்களில், 20 அகவைக்கு உட்பட்டோர் 9 விழுக்காட்டு பேர்களாம். 60 அகவைக்கு மேற்பட்டோரின் கொரோனா பாதிப்பு 17 விழுக்காடாம். 41 அகவையில் இருந்து 60 அகவைக்கு உட்பட்டோரின் கொரோனா பாதிப்பு 33 விழுக்காடாம்.

ஆனால் 21 அகவையில் இருந்து 40 அகவைக்கு  உட்பட்டோரின் கொரோனா பாதிப்பு 42 விழுக்காடு என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

இருப்பினும் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 68 பேர்கள் மூத்த குடிமக்கள் என குறிப்பிட்டார். அவர்களுக்குச் சர்க்கரை வியாதி, மூச்சுத் திணறல், இருதய கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருந்ததாக நடுவண் நலங்குத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.