தப்பான ஊகங்களால் ஒவ்வொரு துறையிலும் தவறான நடவடிக்கைகளை பாஜக அரசு முன்னெடுத்து இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து வருகிறது. 16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கட்டுமானங்கள் சரியில்லாமல் போவதாலேயே விதிமீறல்கள் முன்னெடுக்கப் படுகின்றன என்பது அடிப்படையான ஓர் உண்மை. கட்டுமானங்களை சரி செய்;;ய வேண்டிய ஆளுமை பொறுப்பை ஆசையோடு பெற்றுக் கொண்டு, விதிமீறல்களுக்கு தண்டனையைக் கூட்டினால் கட்டுமானம் சரியாகி விடாது என்கிற அடிப்படை அறிவு பாஜகவினருக்கு இல்லவேயில்லை. அதனாலேயே பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, அரசை, ஆட்சியாளர்களை, அதிகாரிகளை, நேர்ப்படுத்த முயலாமல் மக்களை நேர்ப்படுத்தும் முயற்சியிலேயே காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. பாஜக அரசின் முதலாவது மக்கள் நேர்ப்படுத்தல்- ஆதார். தொடர்ந்து, அஞ்சறைப்பெட்டியில் சேமிக்கப்பட்டிருந்த பணத்தைப் பிடிக்கி தலைவியின் கமுக்கப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்த குடும்பத்தை தெருவில் நிறுத்திய பணமதிப்பிழப்பு. அப்புறம் மக்களுக்கு நெருக்கமான மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வரிகளை சரக்கு-சேவைவரி என்ற பெயரில் பிடுங்கி, மாநில அரசை வெற்று அலங்காரமாக மாற்றி, மக்களை நிராதரவாக்கிய அவலம். அந்த வரிசையில் அடுத்து நேற்றிலிருந்து முன்னெடுக்கப் படுவதுதான், போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தும் புதிய மோட்டார் வாகனச் சட்டம். மேலைநாடுகளில் மக்களே சாலை விதிகளை தெளிவாக முன்னெடுக்கிறார்கள். இங்கே சாலையில் பயணிக்கிற அத்தனை பேரும், குற்றம் செய்வதற்காகவே பிறந்தவர்கள் போல குற்றவாளிகளாக ஆளும் அரசுகளால் கூனி குறுக வைக்கப்படும் மக்கள்தாம் அந்த நாட்டில் பயணிக்கும் போது, தலை நிமிர்ந்து, சாலை விதிகளை தெளிவாகப் பின்பற்றுகிறார்கள். அங்கே சாலைகளில் அமர்ந்து, இலை பேடாமல், மண்சோறு சாப்பிடலாம். இங்கே அப்படியா? ஆக சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்கிற உணர்வை கட்டுமானங்களில் கொணர வேண்டும். கட்டுமானங்கள் சரியில்லாமல் போவதாலேயே விதிமீறல்கள் முன்னெடுக்கப் படுகின்றன என்பது அடிப்படையான ஓர் உண்மை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,263.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.