கவினின் களி(திரு அல்ல)விளையாட்டால், விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான போட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூன்றாவது பருவம் 70வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், அது முழுக்க முழுக்க லாஸ்லியாவை சுற்றியே முன்னெடுக்கப் படுகிறது. பாவம் லாஸ்லியா. 16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான போட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூன்றாவது பருவம் 70வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பரபரப்பு என்று சொன்னால் அது முழுக்க முழுக்க லாஸ்லியாவை சுற்றியே முன்னெடுக்கப் படுகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் தான் இந்த நிலைமை என்றால் வெளியிலிருந்து எய்யப் பட்ட கேள்விக் கணையும் அதே இலக்கையே குறி வைப்பது தான் ஆய்வுக்கு உரியதாக இருக்கிறது. சேரன், லாஸ்லியா, கவின், சாண்டி, தர்சன், முகென், வனிதா, செரின் ஆகிய எட்டு போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு கிழமையும் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி ஒட்டுமொத்த பார்வையாளர்களின் பிரதிநிதியாக பேசிய ஒருவர் லாஸ்லியாவிடம், “சேரன் உங்கள் மீது வைத்திருப்பது உண்மையான பாசம். நீங்களும் அவர் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் சேரனின் பாசம் நாடகம் என்று கவின் சொன்னபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, “எனக்கு எது உண்மை, எது பொய் என்பதில் குழப்பம் உள்ளது. நான் உண்மையாக இருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். அதை நான் யாருக்கும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்று கண்ணீருடன் திணறியபடி பதிலளித்துள்ளார். அறுபத்தி நான்கு படப்பிடிப்புக் கருவிகள் படம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் போட்டி நிகழ்ச்சிக்கு என்று உள்ளே சென்றிருப்பவர்களுக்கு காதல் என்ன வேண்டிக் கிடக்கிறது? கவின் சரியில்லை! ஒவ்வொரு பெண்ணையும் காதல் தலைப்பில் அழவைத்தும், அசிங்கப்படுத்தியும், வெளியேற்றியும் வருகிறார். பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சித் தொடக்கத்திலிருந்தே கவின் அசிங்க(திருஅல்ல)விளையாட்டே பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளடக்கமாகி விட்டது. பிக்பாசால், வனிதா மீண்டும் உள்ளே கொண்டு வரப்பட்டதே ஏதாவது புதிய உள்ளடக்கம் தருவார் என்றுதான். ஆனால் அவர் தரும் உள்ளடக்கமும் கவினின் களிவிளையாடலால் கடைசியாக அசிங்கப்பாட்டில் சிக்கியிருக்கும் லாஸ்லியா குறித்தானதாகவே உள்ளது. கவினுக்கு நெருக்கமாக இருக்கிற சாண்டி எளிதாக கவினை நேர்படுத்த முடியும் என்றாலும் அவர் வெறும் விளையாட்டுப் பிள்ளையாக பிக்பாஸ் வீட்டை களோபரப் படுத்திக் கொண்டிருக்கிறார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவின் களியாட்டம் குறித்துப் பாடி, நாமும் அமைதியாகி விட வேண்டியதுதான். கவினுக்கு பிக்பாஸ் தலைப்பைத் தூக்கிக் கொடுத்து, பிக்பாசும் கமலும் அசிங்கப்படாமல் காத்துக் கொள்வது அவர்கள் விருப்பம். தமிழ்ப் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்காமல் இருக்க வேண்டுமே என்பதே தமிழ்மக்கள் சார்பாக நமது கவலை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,263.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.