Show all

ரூ.1,20,00,000 சம்பளத்தில் கூகுளில் வேலை பெற்றுள்ளார்! 22 அகவை தென்னிந்திய மாணவர்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூருவை சேர்ந்த 22 அகவை மாணவர் ஆதித்யா பலிவாலுக்கு கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் ஆண்டுக்கு ரூ. 1.20 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பிரிவில் புதிய நபர்களை பணியமர்த்துவதற்காக தேர்வு நடத்தியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,000 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் அடிப்படையில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஆதித்யாவும் ஒருவர்.

அதேபோல, கணினி மொழி குறியீட்டுக்கான போட்டிகளில் ஒன்றான ஏசிஎம்  இன்டர்நேஷனல் காலேஜியேட் புரோகிராமிங் தேர்வு (ஐசிபிசி) நடைபெற்றது, அதில், 111 நாடுகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதன் இறுதிப் பட்டியலில் ஆதித்யாவும் இடம்பெற்றார்.

இந்நிலையில், அவருக்கு கூகுள் நிறுவனத்திலிருந்து அடுத்த திங்களன்று செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பிரிவில் பணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூகுளின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பணிபுரிவது தனது ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனவும் அங்கு பலவற்றை கற்று கொள்ள விரும்புவதாகவும் ஆதித்யா பலிவால்  தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,842.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.