வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது கெஜ்ரிவால் டெல்லி அரசு. பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில் ஈடுபடுவதோடு- மது வகைகளுக்கு 70விழுக்காடு கொரோனா சிறப்பு வரி வேறாம். 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: டெல்லியில் மது பானங்களுக்கு 70விழுக்காடு கொரோனா வரி விதிக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க என்று, மூன்றாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புகளை ஒழுங்கு செய்ய என்று நாடு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டும் வருகிறது. நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்னும் 12 நாட்கள் தொடரவுள்ளன. பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிக அளவில் தளர்த்தப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் பொருளாதார பாதிப்புகளை ஒழுங்கு செய்ய- அடாவடி நடுவண் பாஜக அரசிடம் சரக்கு சேவை வரி நிலுவைகளை விட்டு வைத்து விட்டு- இந்தியா முழுக்க பெரும்பாலான மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து பகுதிகளிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் நேற்று டெல்லியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. டெல்லியில் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு மொத்தம் நேற்று 150 மதுபான கடைகள் இயங்கின. 40 நாட்களுக்கு பின் மதுபான கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் டெல்லியில் கூட்டம் அலை மோதியது. ஆயிரக்கணக்கில் மதுக்குடியர்கள் முண்டி அடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கினார்கள். இதனால் டெல்லியில் மொத்தமாக சமூக இடைவெளி வீணானது. இது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையை சாதகமாக்கிக் கொண்டு, அதிரடியாக டெல்லியில் மது பானங்களுக்கு 70விழுக்காடு கொரோனா சிறப்பு வரி விதிக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் டெல்லியில் மதுபான கடைகளில் கூட்டம் குறையும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். (ஆனால் மாநில அரசின் கல்லா நிறையும் என்பதே உண்மை) இதனால் டெல்லியில் மதுபானங்களின் விலை சரமாரியாக ஏற உள்ளன. இன்று முதல் இந்த புதிய விலை நடைமுறைக்கு வருகிறது. இதை கொரோனா சிறப்பு வரி என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



