Show all

முதலாவதாக மின்வாரியம்! இனி ஊரடங்கு பாதிப்பு பட்டியலை எல்லாத்துறையும் வெளியிடும். இதுவரை கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டு வந்தது நலங்குத்துறை மட்டும்

நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. இதுவரை கொரோனா பாதிப்பை நலங்குத் துறை பட்டியல் வெளியிட்டது. இனி எல்லாத்துறைகளும் பட்டியல் வெளியிடும் ஊரடங்கு பாதிப்பை. முதலாவது பட்டியல் மின்வாரியத்திடமிருந்து.

22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. இதுவரை நலங்குத் துறை பட்டியல் வெளியிட்டது கொரோனா பாதிப்பை. இனி எல்லாத்துறைகளும் பட்டியல் வெளியிடும் ஊரடங்கு பாதிப்பை. முதலாவது பட்டியல் மின்வாரியத்திடமிருந்து.

இனி கொரோனாவிற்கு என்ன செய்யப்போகிறோமோ, அதை நாற்பது நாட்களும் செய்து வந்து கொண்டே, இனி தளர்த்தப் போகிற ஊரடங்கை தொடராமலே இருந்திருந்தால், முழுக்கவனமும் கொரோனா மீதே செலுத்தி நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தை வளமையோடு முன்னெடுத்திருக்கலாம். ஆனால் தற்போது மக்களும் அரசும் வறுமையில். 

மக்களுக்கு ஊரடங்கைத் தளர்த்தியாயிற்று. அரசுக்கு (நடுவண் அரசை நெருக்கி சரக்கு சேவை வரி நிலுவையை வசூலிக்க முயன்றால், தேசத்துரோகிகள் ஆக்கிவிடுமோ பாஜக நடுவண் அரசு என்கிற பயத்தில், மதுவணிகத்தை கையிலெடுக்கின்றன அனைத்து மாநில அரசுகளும். 

இந்தியா முழுவதும் ஊரடங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், மின் விநியோக நிறுவனங்களில் கட்டண வசூல் அளவு, எப்போதும் இல்லாத வகையில் சுமார் 80 விழுக்காடு குறைந்துள்ளது. தற்போது பெறப்பட்டுள்ள கட்டணம், விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இந்நிலையில் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி வாங்கவும், மின்சாரக் கடத்தலுக்கான செலவுகளுக்கு நிதி இல்லாமல் தவித்து வருகின்றன மின்சார விநியோக நிறுவனங்கள். 

இந்த நிதி பற்றாக்குறை தொடர்ந்து நிலவினால் நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாட்டின் காரணமாக அதிகளவிலான மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

தற்போது மின்சார விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் நடுவே நிலவி வரும் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய இத்துறை தற்போது நடுவண் அரசிடம் உடனடியாக 90,000 கோடி ரூபாய் நிதி உதவியை நாடி வருகிறது. இதற்கான ஒப்புதல் பெற 2 முதல் 3 கிழமைகளும், அதற்கான நிதி திரட்ட அடுத்த 2 முதல் 3 கிழமைகளும் ஆகும். இந்நிலையில் அடுத்த 6 முதல் 8 மாத காலத்தில் இந்திய மக்கள் அதிகளவிலான மின் வெட்டைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. 

ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் வணிகம் மற்றும் தொழிற்சாலை முடங்கியுள்ளதாலும், நடுவண் மாநில அரசுகள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த போதிய கால அவகாசம் கொடுத்துள்ள காரணத்தாலும் மின்சார விநியோக நிறுவனங்கள் வழக்கத்தைக் காட்டிலும் வெறும் 20 முதல் 25 விழுக்காட்டிற்கு குறைவான கட்டணத்தை மட்டுமே வசூல் செய்துள்ளனர். 

மேலும் இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஊரடங்கு காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் எதிர்வரும் ஆபத்துகளைச் சமாளிக்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும் தொழிற்துறை நிறுவனங்களும் நிதியை முடக்கி வைத்துள்ளதால், மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கின்றனர்.   

மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மின்சாரப் பயன்பாடும் 30 விழுக்காட்டிற்கு மேலாக குறைந்துள்ளது. இவை அனைத்தும் பெரும் தொழிற்துறை, உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்து இருக்கும் காரணத்தால் அதிகளவிலான வருமானம் பாதிப்பு அடைந்துள்ளது. மாநில மின் நிலையங்கள் மட்டும் சுமார் 92,887 கோடி ரூபாய் அளவிலான கட்டணம் பெரும், அதில் 80,818 கோடி ரூபாய் தமிழ்நாடு, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கான, ஆந்திரா பிரதேசம் மாநிலங்கள் பெறுகின்றன. 

தற்போது ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாநில மின் அமைப்புகள் நடுவண் அரசிடம் கடன் உதவியைக் கேட்டுள்ளன. இந்தக் கடன் உதவி குறைந்த வட்டியில் விரைவில் கிடைத்தால் மின் உற்பத்தியிலும், விநியோகத்திலும் எவ்விதமான தடையும் இருக்காது. இல்லையெனில் நாடு முழுவதும் நீண்ட நேரம் அல்லது அதிக நேரத்திற்கு மின் வெட்டை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.