வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது தமிழக அரசு- பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில் ஈடுபட்டு. 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது தமிழக அரசு- பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில் ஈடுபட்டு. சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில் மதுக்கடைகள் திறப்பில, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் நாளைமறுநாள் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. அதாவது சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர எல்லைக்குள் வராத, கட்டுப்பாட்டில் வாராத பிற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஊரடங்கில் மூடியதைப் போல ஒட்டுமொத்தமாகவே மூடிவிட்டால் என்ன? டாஸ்மாக்கை, என்று 95விழுக்காட்டு தமிழக மக்கள் கனவு கண்டு வந்திருந்த நிலையில், மதுக்கடைகள் திறக்கப்படுவதாக தமிழகஅரசு நேற்று வெளியிட்டது மக்களை வீணடிக்கும் அறிக்கை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



