Show all

கோவிசீல்டு தடுப்பூசியை ஒற்றைத் தடவை மட்டும் செலுத்தும் வகைக்கு யோசிக்கிறது ஒன்றிய அரசு! தடுப்பூசி தட்டுப்பாட்டு காரணம் பற்றி

தடுப்பூசி தட்டுப்பாட்டு காரணம் பற்றி, கோவிசீல்டு தடுப்பூசியை இரண்டு, தடவைகளுக்குப் பதிலாக ஒரு தடவைத் தடுப்பூசியாக மாற்றுவது குறித்து, ஒன்றிய அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

19,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு தடுப்பூசியை இரண்டு, தடவைகளுக்குப் பதிலாக ஒரு தடவைத் தடுப்பூசியாக மாற்றுவது குறித்து, ஒன்றிய அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, கொரோனா தடுப்பூசி தயாரித்தன. இதை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து பரிமாற்றுகிறது. இந்தத் தடுப்பூசி இந்தியாவில் கோவிசீல்டு என்றும், மற்ற நாடுகளில், வாக்சேவ்ரியா என்றும் அழைக்கப்படுகிறது.

மொத்தம் இரண்டு தடவைகளாக போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான கால இடைவெளியை, 4 - 6 கிழமைகளில் இருந்து, 12 - 16 கிழமைகளாக, ஒன்றிய அரசு அண்மையில் அதிகரித்தது. ரஷ்யாவின், ஸ்புட்னிக் - வி லைட் மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் ஒரு தடவை மட்டுமே போடப்படுகின்றன. இதைப் போல கோவிசீல்டையும், இரண்டு தடவைகளுக்குப் பதிலாக, ஒரு தடவை தடுப்பூசியாக மாற்றினால், அதன் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, ஒன்றிய அரசு யோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தடுப்பூசிக்கான ஒன்றியத் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது: தடுப்பூசி போடும் அன்றாட எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில், மாதம் ஒன்றுக்கு, 20 - 25 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படும். அடுத்த மாதத்தில் இருந்தே, நாடு முழுதும், நாள் ஒன்றுக்கு, 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட, ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அதற்குள், ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் உள்நாட்டு தயாரிப்பும் தொடங்கிவிடும். பைசர், மாடர்னா தடுப்பூசிகளும் நம் நாட்டில் கிடைக்கத் தொடங்கிவிட்டால், தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது. தற்போது இரண்டு தடவைகளாக செலுத்தப்படும் கோவிசீல்டு தடுப்பூசியை, ஒரு தடவையாக மாற்றினால், அதன் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் மதிப்பீடு செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.