4.2 லட்சம் கோவிசீல்டு தடுப்பூசி தடவைகள் இன்று மாலை சென்னை வருகிறது என்கிற மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக நலங்குத்துறை வெளியிட்டுள்ளது. 18,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தடுப்பூசி ஒன்று மட்டுமே கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் முதன்மைத் தீர்வு என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதற்கான முனைப்புடன் ஈடுபட்டு வருக்கிறது தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு. ஒன்றிய பாஜக அரசின் பொறுப்பின்மை நிருவாகத்தால் தமிழ்நாட்டிற்கான தடுப்பூசிகள் தாமத்தப்பட்டு வரும் நிலையில், 4.2 லட்சம் கோவிசீல்டு தடுப்பூசி தடவைகள் இன்று மாலை சென்னை வருகிறது என்கிற தகவலைத் தமிழக சுகாதத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 3 நாட்கள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் நேற்று கூறினார். இந்நிலையில், இன்று மாலை மேலும் 4,20,570 தடவைகள் கோவிசீல்டு தடுப்பூசி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தடையும் என தமிழக நலங்குத்துறை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியானது 45 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக ஒதுக்கப்பட்டது என்று தமிழக நலங்குத்துறை தெரிவித்து உள்ளது. சென்னை வரும் தடுப்பூசிகள் இன்று இரவே மாவட்டங்களுக்குக் கொண்டுதரப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி, தடங்கலின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.