09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, மும்பை, சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில், மல்லையா சார்பில் பதிகை செய்யப்பட்டுள்ள பதிலில், வங்கிக் கடன்கள் தொடர்பாக சமரசம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால், அமலாக்கத் துறை அந்த முயற்சியை தடுக்கிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திவாலாகத, கடன்களை ஏமாற்ற வேண்டிய தேவையும் இல்லாத, மல்லையாவுக்கு மட்டும் இத்தனை நெருக்கடிகள் ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது என்கின்றனர் சில பொருளாதார வல்லுநர்கள். கார்ப்பரேட்டுகளுக்கு விழுந்து விழுந்து உதவும் மோடி ஆட்சியில், ஏன் இந்த புதிர் நடவடிக்கை. மோடியாவது, மல்லையாவாவது, ராபேல் புதிரை விடுவித்தது போல ராகுலாவதுதான் விடுவிக்க வேண்டும் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



