Show all

மோடிக்கு கின்னஸ் சாதனை விருது கிடைக்கலாம்! வெட்டிச் செலவு செய்வதில், செய்ய வைப்பதில்

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெட்டிச் செலவு செய்வதில் சிறந்த தலைமை அமைச்சராக சாதித்து வருகிறார் மோடி. தேவையில்லாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், அச்சடித்த நோட்டுக்களை வீணடித்தது ஒரு வெட்டிச் செலவு. அதற்காக புதிய ரூபாய்தாள்களை அச்சடித்தது ஒரு வெட்டிச் செலவு. புதிய ரூபாய்தாள்களை புதிய வடிவத்தில் அச்சடித்து, பணம் வழங்கும் இயந்திரங்களில் மாற்றம் செய்ய வேண்டி வந்தது வங்கிகளுக்கு ஏற்படுத்தப் பட்ட வெட்டிச் செலவு. ஆதார் அட்டைக்கும், ஆதார் அட்டையை அதனோடும், இதனோடும் இணைப்பதற்கு அலைகழிக்கப் படும் மக்களுக்கு வெட்டிச்செலவு. இவர் உலகம் சுற்றுவதற்கு அரசுக்கு தண்டச் செலவு. இவர் நண்பர் அம்பானிக்கும், பினாமி கார்ப்பரேட்டுகளுக்கும், சொத்து சேர்ப்பதற்காக வெளிநாட்டுப் பயணம் செய்யும் வெட்டிச் செலவு. இப்போது புதியதாக கிளம்பவிருக்கிறது ஒரு வெட்டிச்செலவு.

ஆம்! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ தொட்டாலே பங்குகளை மூட வேண்டி வரும். ஏன் தெரியுமா? பெட்ரோல், டீசல் விலை நஞ்சுபோல மளமளவென அன்றாடம் ஏறிக்கொண்டுள்ளது. கடந்த பல நாட்களாகவே அன்றாடம் பெட்ரோல், டீசல் விலை சில பைசாக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், விரைவிலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மட்டுமின்றி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கடுப்பாகியுள்ளனர். 

தற்போது நடைமுறையிலுள்ள பெட்ரோல், டீசல் வினியோக மீட்டர்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படும். நடுவண் அரசு அறிவுறுத்தல்படி, இப்போது மீட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போதுள்ள மீட்டரில் புள்ளிக்கு இடதுபுறம் இரு எண்கள், வலதுபுறம் இரு எண்கள் இடம்பெற முடியும். ஆனால், லிட்டர் 100ஐ தாண்டினால், மீட்டர்களை மாற்றியமைக்க தேவையுள்ளது. மீட்டரை மாற்ற வேண்டும் பெட்ரோல், அல்லது டீசல் விலை லிட்டருக்கு 99.99 ரூபாய் வரை உயர்ந்தால் அப்போது மீட்டரை மாற்ற தேவை இருக்காது. ஆனால், அதற்கு மேல் விலை ஏறினால் மீட்டரை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும். அப்போது சில பெட்ரோல் பங்க்குகளை மூட வேண்டிய தேவை ஏற்படலாம். ஏனெனில் மொத்தமாக மீட்டர்களை மாற்றியமைக்க தேவையான நிபுணர்கள் கிடைப்பதில் அப்போது தட்டுப்பாடு ஏற்படும். 

இது இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு மோடியால் ஏற்படுத்தப்பட விருக்கிற வெட்டிச் செலவு. கூப்பிடுங்கப்பா! கின்னஸ் சாதனை விருது வழங்கும் நிறுவனத்தை. நம்ப மோடி ஐயாவிற்கு வெட்டிச் செலவுகளுக்கான வித்தகர் விருதை கொடுத்து விட்டுப் போகட்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.