09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா ஓராண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிறைவு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நந்தனம் ஒய்எம்சிஏவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் அச்சடிக்கபட்டு உள்ளது இந்த அழைப்பிதழில் மு.க ஸ்டாலின், கனிமொழி வாழ்த்துரை என்று போடப்பட்டுள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதைவிட தினகரன் பெயர் அழைப்பிதழில் இடம்பெற்று உள்ளது. மேலும் டி.கே. எஸ். இளங்கோவன், பி.கே. சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நல்ல முயற்சிதான்! வாழ்த்துக்கள் எடப்பாடியாரே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



