Show all

குமாரசாமி உறுதி நிலைக்குமா! பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவே காங்கிரசுடன் கூட்டணி

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடைசியாக கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையை கர்நாடக மக்கள் தீர்ப்பாக வழங்கி விட்டனர்.

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். 

இதையடுத்து குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய சித்தராமையா, ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பதை ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், குமாரசாமிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தது காங்கிரஸ் மேலிடம் தான் என்றும் குறிப்பிட்டார். குமாரசாமி தலைமையிலேயே ஆட்சி அமைய உள்ளது எனவும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது எனவும் சித்தராமையா கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவே மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி, அமைத்துள்ளதாக கூறினார்.

குமாரசாமி உறுதியாக இருப்பாரா? அப்படி உறுதியாக இருந்தால் பாஜக என்னென்ன தில்லாலங்கடியில் ஈடுபடும்? குதிரைப் பேரங்கள் எல்லாம் முடிந்து எப்போது கர்நாடகாவில் இயல்பு நிலைதிரும்பும்? ஒட்டு மொத்த இந்தியாவும் அநியாயங்களை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. இயந்திர வாக்குப் பதிவு மட்டும் இல்லாமல் எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தல் நடைபெறுமானால் மக்கள் எல்லாவற்றையும் கணித்து  சரியான தீர்ப்பு வழங்குவார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.