Show all

கர்நாடகம் சாதனை! முதன் முறையாக ஹிந்தியைக் கைகழுவிது பாஜக

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்தி, ஹிந்துத்துவம், ஹிந்துராஷ்டிரம் என்பனதாம் பாஜகவின் அடிப்படை வேதாந்தம். கர்நாடகத்தைக் கைப்பற்றும் ஆர்வத்தில் முதன் முறையாக ஹிந்தியைக் கைகழுவியிருக்கிறது பாஜக.

ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கானது பாஜக என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் மொழி ஒரு தடையே இல்லை. கர்நாடக நலனுக்காக பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து, அதில் பாஜக 104 தொகுதிகளில் வென்று உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.

கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

பாஜக என்பது ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. கோவா, குஜராத், மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வென்றது. பாஜக என்பது இந்தியாவுக்கானது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பாஜகவின் ஆட்சி உள்ளது.

கர்நாடக மக்களின் நலனுக்கான அனைத்து மேம்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த எந்த தடையும் இனி இல்லை. என்று பேசியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.