01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தில் பாஜக பெற்ற வெற்றி அந்தக் கட்சியினுடைய வெற்றி அல்ல, அது மின்னணு வாக்கு எந்திரங்களுக்கான வெற்றி. எங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி 75 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, பாஜக 105 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் முன்னிலையுடன் இருந்து வருகின்றன. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்க போதுமான சட்டமன்;ற உறுபப்பினர்கள் இல்லாவிட்டாலும், பாஜகவை ஆட்சி அமைக்க வரவிடக்கூடாது என்பதில் தீரமானமாக உள்ளது. இதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளித்து அந்த கட்சியை ஆட்சி அமைக்கக் கூறியுள்ளது. இதற்கிடையே கர்நாடகத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கீச்சுவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 'கர்நாடக மாநிலத்தில் பாஜகவினர் பெற்ற வெற்றி அவர்கள் பெற்ற வெற்றி அல்ல. அது மின்னணு வாக்கு எந்திரங்களின் வெற்றியாகும். மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் இருக்கிறது. இந்தச் சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது. இடைத் தேர்தலில் தோல்வியுற்ற பாஜக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுகிறது. நீங்கள் உங்களை நம்பினால், மின்னணு வாக்குஎந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவதை கைவிட்டு, வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்தி வெற்றி பெறுங்கள்.' என உத்தவ் தாக்கரே தெரிவித்தார். உத்தவ் தாக்கரேயின் கருத்தை நவநிர்மான் சேவானா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேயும் வரவேற்றுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



