Show all

நேற்றுடன் கல்யாண வீட்டிற்கு முழுக்கு! இனி முழுமையாக விஜய் தொலைக்காட்சிதான்

பார்வையாளனை ரொம்ப சுத்தலில் விடுவதில் இருந்து விடுபட விரும்பாத சன் தொலைக்காட்சி தொடர்களிலிருந்து மட்டுமில்லாமல், சன்தொலைக்கட்சியிலிருந்தே விடுபடும் மனநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் பார்வையாளர்கள். 

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு காலத்தில் தெருவில் நடந்து போனால் நமது வீடு வரும் வரை எல்லா வீடுகளிலும் சன் தொலைக்காட்சிதான் ஓடிக் கொண்டிருக்கும்.
அடடே இந்தத் தொடரை பார்ப்பதற்குள் வீட்டிற்கு வரமுடியாமல் போய் விட்டதே என்று கவலைப் பட வேண்டியதிருக்காது. அந்தத் தொடரின் வசனம் மட்டுமே கேட்டுக் கொண்டே வீடு வந்து சேரலாம். 
இன்று போல் அன்று ஒவ்வொருவர் கையிலும் மிடுக்குப் பேசிகள், வலையொளி, (யூடியூப்) ஹாட்ஸ்டார் செயலிகள் எல்லாம் இல்லாத காலம் அல்லவா? அதனால் சன்தொலைக்காட்சி தொடர்கள் தமிழர்கள் வாழ்க்கையோடு ஒன்றிப் போயிருந்தது. 
சாண்டில்யனின் கடல்புறா, கல்கியின் பொன்னியின் செல்வன் புதியதாக வாங்கிய புத்தகங்கள் கிழியும் வரை வீடு வீடாக இரவல் சென்று வரும்.
இவைகள் எல்லாம் தமிழர்களால் தொடர்ந்து விரும்பப் பட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்தத் தொடர்கள், கதைகளில் எல்லாம் கதைத்தலைவன் அல்லது கதைத்தலைவி (ராதிகா தொடர்களில் கதைத்தலைவிதானே முதன்மைப் படுத்தப் படுவார்.) விழுவார்கள்; எழும் போது கலைநயத்தோடு எழுவார்கள்.
அண்மைக்காலமாக சன்தொலைக்காட்சிக்குப் போட்டியாக விஜய் தொலைக்காட்சி சிறப்பாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. நிறைய பேர்கள் சன்தொலைக்காட்சியிலிருந்து  விஜய் தொலைக்காட்சிக்கு மாறி விட்டார்கள். 
ஒன்று, சன் தொலைக்காட்சி ரொம்ப வணிகத்தனமாக இருக்கிறது. சன்நெக்ஸ்ட் காசு கொடுத்து  வாங்க வேண்டும். ஆனால் ஹாட்ஸ்டார் இலவசமாகக் கிடைக்கிறது.
இரண்டு, பார்வையாளனை சன்தொலைக்காட்சி தொடர்கள் ரொம்ப சுத்தலில் விடுகின்றன. ராஜா ராணி பார்த்து விட்டு, திருமுருகனின் கல்யான வீட்டிற்காக சன்தொலைக்காட்சிக்குத் தாவியவர்களில் நிறைய பேர்கள் நேற்றிலிருந்து அந்த ஒற்றைத் தொடரின் மீதும் ஏற்பட்ட வெறுப்பால் சன்தொலைகாட்சிக்கு முழுக்கு போடப் போவதாக பதிவிட்டு வருகிறார்கள். 
கதைத்தலைவி செம்பருத்தியை ஒட்டுமொத்த குடும்பமும் குடும்பத்திற்கு இலாயக்கில்லாதவர் என்று புறந்தள்ளியதை சீக்கிரமாக முடித்துக் கொண்டு, நேற்றிலிருந்து செம்பருத்தி குடும்பக் குத்துவிளக்காக பார்வையாளர்கள் நெஞ்சில் அரியணை ஏற்றப்படுகிறார். 
ஆனால் இந்த வீணாய்ப் போன திருமுருகன், காணாமல் போன கோபியைப் பற்றி கொஞ்சமும் சிரத்தைக் காட்டாமல், கீழ்மகன் இரத்தன வேலுவை டெல்லியிலிருந்து இறக்குமதி செய்து, மனோகரன் ரம்யா குடும்பத்தில், மீண்டும் பழைய அதே இத்துப் போன ஹைதர்அலி திப்பச்சூல்தான் காலத்து அலப்பறையைத் தொடங்குகிறார். 
கல்யாண வீடு தொடரில் திருமுருகன் காமெடிகள் எதுவும் இரசிக்கும் படி இல்லை. மொட்டி ஒலி திருமுருகன், நாதசுரத்தில் தளர்ந்து கல்யாண வீட்டில் தள்ளாடத் தொடங்கி விட்டார்.

நாம் ஏன் புலம்பிக் கொண்டிருக்க வேண்டும். கல்யாண வீட்டோடு சேர்த்து சன்தொலைக்காட்சி தொடர்களுக்கே முழுக்கு போட்டு விட வேண்டியதுதான் என்று நிறைய பார்வையாளர்கள் பாதி நாடகத்திலேயே விஜய் தொலைக்காட்சியின் மௌன இராகத்திற்கு தாவியாதாக பதிவிடுகிறார்கள்.   
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,136.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.