இந்தியத் தானியங்கி உலகில் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் தனக்கு சொந்தமான 30 உருக்குத் தொழிற்சாலைகளை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்திய தானியங்கி உலகில் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் தனக்கு சொந்தமான 30 உருக்குத் தொழிற்சாலைகளை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா ஊர்திகள் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டை காட்டிலும் 40 விழுக்காடு கேட்புகள் குறைந்த நிலையில், மின்கட்டண உயர்வு போன்ற மற்ற காரணிகளும் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே இந்த நிறுவனங்கள் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது 30 உருக்குத் தொழிற்சாலைகளை மூட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மின்சாரம், பெட்ரோலியம் சுத்தகரிப்பு, இயற்கை எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட 8 அடிப்படை உள்கட்டமைப்பு தொழில் பிரிவுகள் ஆகியவை நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர் சரிவை எதிர்கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் தொழில் வளர்ச்சிக்கான முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் தானியங்கி துறை சார்ந்த தொழிலதிபர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,234.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.