Show all

எப்படித் தெரியுமா? இந்தியாவிற்கு ரூபாய் பத்து கோடியே பதினெட்டு இலட்சம் வருமானம் ஈட்டித் தந்துள்ளர் தெலுங்கான ஏழைஉழவர்.

துபாய்க்கு வேலை தேடிச் சென்ற தெலுங்கான ஏழைஉழவர்  ரிக்காலா, வேலை ஏதும் பிடிக்காமல் கடந்த 45 நாள்களுக்கு முன்னர் தன் கிராமத்துக்கே திரும்பி வந்து வேளாண் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். வரும்போது அவர் வாங்கி வந்த பரிசுச் சீட்டுக்கு கிடைத்த வருமானத்திற்கு வருமான வரிதான் இந்த ரூபாய் பத்து கோடியே பதினெட்டு இலட்சம்.

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஜாக்ரன்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரிக்காலா. தன் கிராமத்தில் சரியான வேலை கிடைக்காததால் இவர் துபாய்க்கு வேலை தேடிச் சென்றுள்ளார். அங்கு கால்டாக்ஸி ஓட்டுனராகப் பணியாற்றி வந்த ரிக்காலா அது பிடிக்காமல் வேறு வேலை தேடியுள்ளார். எதுவும் சரிவராததால் கடந்த 45 நாள்களுக்கு முன்னர் தன் கிராமத்துக்கே திரும்பி வந்து வேளாண் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஊருக்குத் திரும்பும் முன்னர் துபாயில் ரப்லே பரிசுச்  சீட்டுகளை ரிக்காலா வாங்கியுள்ளார். மேலும், துபாய் ஷாப்பிங் ஸ்பெஷல் பரிசுச்சீட்டு ஒன்றும் வாங்கியுள்ளார். தற்போது அந்த பரிசுச் சீட்டுக்கு 4.08 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.28,43,32,500 கோடி ரூபாய். ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டி வந்த ரிக்காலா ஒரே லாட்டரியில் கோடீசுவரன் ஆகியுள்ளார்.

இது பற்றி கல்ப் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ரிக்காலா, துபாயிலிருந்து இந்தியா திரும்பி வருவதற்குக்கூட என்னிடம் பணம் இல்லை. ஆனால், பரிசுச் சீட்டு வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. என் விருப்பத்தை மனைவியிடம் கூறியபோது, அவர் எதுவும் பேசாமல் தான் சேர்த்து வைத்திருந்த 20,000 ரூபாயை என்னிடம் தந்தார். அதை வைத்துதான் நான் பரிசுச் சீட்டு வாங்கினேன். இப்போது எனக்குக் கிடைத்துள்ள பணக்காரத் தகுதிக்கு என் மனைவி பத்மாவே முழு காரணம். தற்போது கிடைத்துள்ள இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என் கிராமத்திலேயே வேளாண் பணியே செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,234.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.