Show all

ஏன்? குமுறும் கேரளா மக்கள்! முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மறுப்பு

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க நான்கு ஆண்டுகளாக முதல்வர் பினராயி விஜயன் 3 முறை முயற்சித்திருந்தார். ஆனால் நேரம் ஒதுக்க இந்தியத் தலைமை அமைச்சர் அலுவலகம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் குடிமைப் பொருட்கள் ஒதுக்கீடு குறித்து இந்தியத் தலைமை அமைச்சர் மோடியிடம் பேசுவதற்கு பினராயி விஜயன் தலைமையிலான அனைத்து கட்சி குழு நேரம் கேட்டிருந்தது. இந்த முறையும் இந்தியத் தலைமை அமைச்சர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை.

அத்துடன் தேவைப்பட்டால் நடுவண் உணவு, பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தியுங்கள் என கூறிவிட்டது இந்தியத் தலைமை அமைச்சர் அலுவலகம். ஆனால் ராம்விலாஸ் பஸ்வானை சந்திக்க முடியாது எனக் கூறிவிட்டார் பினராயி விஜயன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.