Show all

கலாய்க்கும் ராகுல்! பழைய ரூபாய் தாள்கள் மாற்றியதில் 'முதல் பரிசு' வென்ற அமித்ஷா

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக உள்ள அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பழைய ரூபாய் தாள் மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் வாழ்த்து சொல்லி கிண்டல் செய்திருக்கிறார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம், அஹமதாபாத் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் இயக்குநராக உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தை மோடியின் பணமதிப்பு நீக்கத்தின் போது இந்த வங்கியில் இருந்து 5 நாட்களுக்குள் ரூ.745,00,00,000 பழைய ரூபாய் தாள்கள் மாற்றப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்தது.

இது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கீச்சு பக்கத்தில் கூறியிருப்பதாவது, அமித்ஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள், அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநராக இருக்கிற உங்களுடைய வங்கி, 5 நாட்களுக்குள் ரூ.745,00,00,000 பழைய ரூபாய் தாள்களை மாற்றி முதல் பரிசு பெற்றுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை பணமதிப்பு நிக்கத்தால் அழிக்கப்பட்டது. உங்களுடைய இந்த சாதனைகளுக்கு பெரிய வீரவணக்கம். என்று பதிவிட்டு அமித்ஷாவையும் பாஜக ஆட்சியையும் கிண்டல் செய்துள்ளார்.

அதன் கீழே, அமித்ஷாவின் படத்தில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தை அதிக அளவில் பெறப்பட்ட வங்கியின் இயக்குநர் என்றும் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 81 விழுக்காடு நிதி அதிகரித்த கட்சியின் தலைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.