Show all

முறைசெய்யா மன்னவன் என்று மோடிக்கு எதிராக கீச்சுப்பதிவா! என்ன ஆச்சு எச்.இராஜவுக்கு

தற்போது தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையைச் செயல்படுத்த எந்த அவசரமும் இல்லை. நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையில் நிறைய கேள்விகள் உள்ளன. நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என மேற்கு வங்க அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் எச்.இராஜாவின் இந்தக் கீச்சுப் பதிவு எதற்காக? இணையம் சூடேறிக் கொண்டிருக்கிறது!

23,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளில் 56வது அதிகாரமான கொடுங்கோன்மை அதிகாரத்தில் வரும் மூன்றாவது குறளை வெளியிட்டு முறை செய்யா மன்னவன் என்று சாடி கீச்சுப் பதிவிட்டுள்ளார் எச்.இராஜா.
அந்தக் குறள்:
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
மு.வ உரை:
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.
கலைஞர் உரை:
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
எச்.இராஜாவின் கீச்சு:
வள்ளுவம் அறிவோம்- இன்றைய குறள்- 
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாடொறும் நாடு கெடும். 
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான் என்று பதிவிட்டுள்ளார் எச். ராஜா. 

எதற்காக எச்.இராஜா இந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறார்? தற்போது அவர்களின் தேசிய அரசாங்கத்தின் மன்னவன் நரேந்திரமோடி. 
நரேந்திர மோடி முறை செய்யா மன்னவர் என்பது தமிழக மக்களின் கடந்த ஆறு ஆண்டுகாலப் புலம்பல்.
இவ்வளவு கொடுமையான கொரோனா- நாட்டு மக்களுக்கு கொடுமையான தீங்கு இழைத்து வரும் நிலையில்- 
மாமன்னன் நரேந்திர மோடி அதற்கான எந்த நிவாரணமும் முன்னெடுக்காமல் புதிய கல்விக்கொள்கை குறித்து பேச மாநாடு போடுவதை நேற்று கூட வங்காளத்தின் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி சாடியிருந்தார்.
மாமன்னன் நரேந்திர மேடியின் நிறைய முறை செய்யாமைகள் இருக்கின்றன. எந்த முறை செய்யாமை எச். இராஜாவிற்குப் பிடிக்கவில்லை? 
எதற்கு- ‘நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்’ என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் எச்.இராஜா. என்ற பரபரப்பு விவாதம் இணையத்தைச் சூடேற்றி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.