Show all

முழுமையான மகிழ்ச்சியைக் கொண்டாடப் போவது யார்? மூன்று நாள் மகிழ்ச்சியை கொண்டாடுகிறது பாஜக.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன. இதனால் தேர்தல் முடிவு வரையிலான மூன்று நாள் சிறப்பு கொண்டாட்ட உரிமை, பாஜகவிற்கு கிடைத்திருக்கிறது.

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரும்பாலான ஊடகங்கள், தங்கள் கருத்துக் கணிப்பில் பாஜகவிற்கு வெற்றி அளித்து கொண்டாடி வருகின்றன. விதிவிலக்காக ஏபிபி ஊடகம் மட்டும் தொங்கு பாராளுமன்றத்திற்கு வெற்றி அளித்து, தேர்தல் முடிவுக்குப் பிந்தைய பெட்டி மாற்றும் அரசியல் திருவிழாவிற்கு வாய்ப்பளித்திருக்கிறது. 

ஏபிபி ஊடகக் கருத்துக் கணிப்புப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியால் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் தொகுதிகளை வெல்ல முடியாது. தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில், பாஜக கூட்டணி வெறும் 267 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 

எது எப்படி அமைந்தாலும் அடுத்து தமிழகத்தில் உதிக்கப் போவது உதய சூரியனே. அந்த வகையில் தமிழக நலனுக்கு தேவை நடுவண் அரசில் காங்கிரஸ் ஆட்சியோ, தமிழகம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவின் நிரந்தர நலனுக்கு தேவை மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி. 

தொங்கு பராளுமன்றத்தில், குதிரைப் பேர அரசியலில் பாஜக வெல்லாமல் இருப்பது ஒட்டு மொத்த இந்தியாவிற்கான சிறப்பான எதிர்காலத்திற்கான உத்தரவாதமாக அமையும். பொறுத்திருந்து பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,158. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.