வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ள நிலையில், கருத்துக் கணிப்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் பாமர மக்கள். தேர்தல் ஆணையத்தின் மீது இவர்களுக்கு நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறது. பாஜகவை ஆட்சியில் அமர்த்த இதெல்லாம் நூல் விட்டுப் பார்க்கும் முயற்சி என்பதே பாமர மக்களின் கருத்தாய் இருக்கிறது. 06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரும்பாலான வட இந்திய ஊடகங்கள், தங்கள் கருத்துக் கணிப்பில் பாஜகவிற்கு வெற்றி அளித்து கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில்: திடீரென்று எப்படி மந்திர வித்தை போல பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும்? பாஜக வெல்வதற்கு வாக்கு இயந்திரங்களை எல்லாம் தயார் படுத்தி விட்டு, பாஜகவின் வெற்றியை மக்கள் செரிமானம் செய்து கொள்வார்களா? என்று நூல் விட்டுப் பார்க்கும் முயற்சிதான் இந்த கருத்துக் கணிப்புகள் என்கிற செய்தி பரபரப்பாகி வருகிறது. தேர்தல் ஆணையத்தை சுதந்திரமான அமைப்பாக மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் மூன்று நாள் இருக்கும் போது, மக்கள் நடுவே மூவாயிரம் யோசனைகள், அவநம்பிக்கைகள் தோன்றி தோன்றி மறைந்து மக்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றன இந்தத் தேவையில்லாத கால இடைவெளி.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,158.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



