Show all

திமுகவிற்கு தலைவலி! எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வெளியிட்ட எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கருத்துக் கணிப்பு வெளியிட்ட ஊடகங்கள்: 1.டைம்ஸ் நவ், 2.ரீபப்ளிக் சீ வோட்டர், 3.என்டிதொலைக்காட்சி, 4.இந்தியா டுடே, 5.ஏபிபி, 6.நியுஸ் எக்ஸ் ஆகியன.

அனைத்துமே பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை திமுகவின் கை ஓங்கியிருக்கிறது. திமுக தமிழகத்தில் செல்வாக்கு பெறும் நிலையில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்றால் திமுகவிற்கும் நல்லது. தமிழகத்திற்கும் கொஞ்சம் நல்லது. 

அல்லது காங்கிரசும் அல்லாமல், பாஜகவும் அல்லாமல் மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடுவண் அரசில் அமையுமேயானால், தமிழகத்திற்கு மிக மிக நல்லது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது. 

நடுவண் அரசில், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்குமானால், எடப்பாடி- பன்னீரின் அடாவடி பெரிதாக இருக்கும். தமிழிசை, எச். இராஜாவின் அடாவடி மேலும் கூடுதலாகும். திமுக சிறப்பாக ஆட்சியை முன்னெடுக்கவே முடியாது. நீட், மீத்தேன், சரக்கு- சேவை வரி போன்றவற்றில் தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாது. வழக்கம் போல திமுக இந்த முறையும் முள்ளின் மீது நின்றுதான் ஆட்சி நடத்த வேண்டியிருக்கும். 

தமிழ் அடிப்படை கட்சிகளும், அமைப்புகளும் வாதம் வம்பு வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமாக்கப் படும். 

தமிழக மக்களைப் பொறுத்த வரை இந்திய அரசியலைப் பற்றி எப்போதும் கவலைப் பட்டதில்லை. தமிழ்மக்கள் திமுகவை ஆதரிக்கிற போது, திமுகவின் கூட்டணிக் கட்சியையும், தமிழ்மக்கள் அதிமுகவை ஆதரிக்கிற போது அதிமுகவின் கூட்டணிக் கட்சியையும் இந்திய அரசியலுக்குத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்திய அரசியலுக்கு தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்கிற கட்சி நடுவண் அரசில் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சி தமிழக நலனுக்காக ஏதாவது செய்ய முடியும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.