டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று தனது முதற்கட்ட தேர்தல் கருத்துப்பரப்புதலை மதுரையில் இருந்து தொடங்க உள்ளார். தனது கருத்துப்பரப்புதலில் தமிழ்நாடு மற்றும் ஒன்றிய நலன் சார்ந்த சிக்கல்களை மக்கள் நடுவே எடுத்துரைத்து ஆதரவு திரட்ட உள்ளார். பரப்புரைக்கு புறப்படுவதற்கு முன்னர் கமல் இன்று வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில், புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கமல் வெளியிட்ட கீச்சுப் பதிவு வருமாறு:- சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைஅமைச்சரே…
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



