Show all

சித்ராவின் கால்ஸ் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி இன்று வெளியானது! இது சித்ராவிற்கு முதலும் முடிவுமான படமானது

மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை வேடத்தில் நடித்து பேரறிமுகமானவர் நடிகை சித்ரா. 

28 அகவை சித்ரா, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானர். பின்னர் சின்னத்திரை நடிகை ஆனார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கபதற்காக, சென்னை நசரேத் பேட்டையில் உள்ள மின்மினி உணவகம் ஒன்றில் தங்கி இருந்தார் சித்ரா. சில நாட்களுக்கு முன் இரவு 2.30 மணிக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு உணவக அறைக்கு வந்துள்ளார். இங்கே அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

இந்த சோகநிகழ்வு சின்னத்திரை வட்டாரத்திலும் கொண்டாடிகள் நடுவேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சித்ரா, கால்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம். ஆனால் அவர் நடித்த முதல் படமே கடைசி படமாகவும் அமைந்துவிட்டது. இந்தப் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி இன்று வெளியிடப்பட்டது. இந்த முதல்பார்வை சுவரொட்டியை இணையத்தில் தீயாக்கி வருகின்றனர் அவரின் கொண்டாடிகளும் உடன் நடிகர்களும். இந்தப்படத்தை எஸ்.ஜெயகுமார், காவேரி செல்வி தயாரித்துள்ளனர். சபரீஷ் இயக்குகிறார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.