Show all

டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்: ப.சிதம்பரம்! மாநில மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக


மற்ற மாநில மக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிற டெல்லி மக்களுக்கு நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்து, தொடர்ந்து வரவிருக்கிற இந்தியா முழுவதுமான சட்டமன்றத் தேர்தல்களில், மாநிலங்களில், மக்கள்- யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ப.சிதம்பரம் அவர்கள்.

மற்ற மாநில மக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிற டெல்லி மக்களுக்கு நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வென்று வாகை சூடியுள்ளது. டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் மிகப்பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவிற்கு மக்கள் எழுபதுக்கு எட்டு மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சியிழக்கச் செய்திருக்கின்றார்கள். மாநிலக்கட்சிகளின் பின்னால் நிற்க வேண்டிய காங்கிரஸ் கெத்து காட்டியதால் சுழியம் மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள் டெல்லி மக்கள். 

இந்தநிலையில், டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம கீச்சு பதிவிட்டுள்ளார். அவருடைய கீச்சுப் பதிவில், ‘ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பா.ஜ.கவைத் தோற்கடித்துள்ளனர்’ என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

அந்தந்த மாநிலத்திற்காக வெளிப்படையாக நிற்கிற உண்மை தேசியக் கட்சிகளின் (பாஜக மறைமுகமாக ஹிந்தி, ஹிந்துத்துவா மாநிலங்களுக்காக நிற்கிற போலிதேசியவாதக் கட்சி) பின்னால் நின்று ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடப்பாடு கொண்டது காங்கிரஸ் கட்சி என்பதைப் புரிந்து கொண்டதைச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.