நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய இயக்குனர் லஷ்மன் இயக்கி வருகிறார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாகும். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் (இராசராச சோழன்) வேடத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. 29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் ஜெயம் ரவி அண்மையில் நடித்து வெளிவந்த படம் கோமாளி. இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையால், இவருக்கு விருதுகள் பல தற்போது கிடைத்து வருகிறது. இந்த படத்தில் பள்ளி மாணவன் வேடத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டாராம் ஜெயம்ரவி. உடலளவில் மிகவும் கடினப்பட்டு உடம்பை குறைத்ததாக கூறினார். அந்தப் பயணம் மிகவும் கடினமாக இருந்தபோதும், தற்போது கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தையும் மறக்க வைத்துவிட்டது என்று அண்மையில் ஜெயம்ரவி கூறியிருந்தார். மேலும் கோமாளி படத்தில் ஜெயம்ரவிக்கு அடுத்தாக வெகுவாக நம்மைக் கவர்ந்தவர் யோகிபாபு. யோகிபாபு வேலையாக நடித்து வரும் நடிகர். இவரின் நேரம் (கால்சீட்) படத்தின் போது கிடைக்கவில்லை என்பதனால் ஜெயம்ரவி இவருக்காக மூன்று மாதங்கள் வீட்டில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாம். இந்தப் படத்தின் இயக்குனர் தனது முதல் படத்திலே நல்ல வெற்றியை பதிவு செய்ததால் தயாரிப்பாளர் இயக்குனருக்கு கார் பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய இயக்குனர் லஷ்மன் இயக்கி வருகிறார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாகும். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் (இராசராச சோழன்) வேடத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
கோமாளி படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார் . இந்த படம் தான் தயாரிப்பாளர் ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய பெயரை சம்பாதித்து தந்தது என்றே சொல்லலாம். இதற்கு முன் இவர்கள் தயாரித்த எல்.கே.ஜி படம் நல்ல வெற்றியை பதிவு செய்து இருந்தாலும் கோமாளி படம் மேலும் சிறந்த வெற்றியை பதிவு செய்திருந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



