Show all

யார் அந்த யானை? கலக்கும் இணையக் கருத்துப்படங்கள்! புறநானூற்று பாடலை உதாரணம் காட்டி நிர்மலா சீதாராமன் வரவு-செலவுத்திட்டம்.

யார் அந்த யானை? என்ற கேள்வியோடு இணையத்தில் கருத்துப்படங்கள் கலக்கி வருகின்றன. நிர்மலா சீதாராமன் தெரிவித்த பிசிராந்தையார் பாடல், நேர் எதிரான ஒப்பீடு. எல்லாவற்றிலும் வரி ஏற்றம் செய்து விட்டு, வரிவிதிப்பின் மீது கோபப்படும், பிசிராந்தையார் பாடலை மேற்கோள் காட்டியிருக்க வேண்டாம் என்ற கோபம்.

21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நள்ளிரவில், மாநிலங்களின் உரிமையான வரிவிதிப்பைப் பிடுங்கி, ஒரேநாடு ஒரேவரி என்று, சரக்கு- சேவை வரியை, விற்பனை விலையில் ஆறில் ஒரு பங்கு வரியாக விதித்து, கடந்த ஆட்சியின் போதே கொடுங்கோல்  மன்னனாக ஆட்சி புரிந்தவர்தான் இந்த மோடி.

இது போன்ற மன்னர்களை நெறிப்படுத்தும் முயற்சியில், புறநானூற்றில் இடம்பற்றினார் பிசிராந்தையார். பிசிராந்தையார், அன்று, வரிவிதிப்பு என்ற பெயரில் யானையாக மக்களின் உற்பத்திக்குள் புகுந்து விணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார் பாடல் பாடி. 

யானையை விடக் கேவலமாக நாட்டை சூறையாடும் மோடியின் நிதிஅமைச்சரான நிர்மலா சீதாராமன்: வரவு-செலவுத் திட்ட உரையில் இந்தப் புறநானூற்று பாடலை உதாரணமாக குறிப்பிட்டு நேற்றிலிருந்;து தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று வரவு-செலவுத் திட்டத்தை பதிகை செய்து பேசும்போது, வரி செலுத்துகிறவர்கள் பொறுப்புமிக்க குடிமக்களாக உள்ளனர் என கூறி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்; ஆம் உண்மைதான்!

அவர்களது மதிப்புமிக்க பங்களிப்பினால்தான் அரசாங்கம் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கனவை நிறைவேற்றும் வகையில் பணியாற்ற முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்; இதுவும் உண்மைதான்!

இதுபற்றி குறிப்பிடுகையில் அவர் பிசிராந்தையார் மன்னர் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுரையாக கூறிய ‘யானை புகுந்த நிலம்’ பாடலின் சில வரிகளை குறிப்பிட்டார். அதை அவர் தமிழில் கூறினார்.
காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போல
தானும் உண்ணான், உலகமும் கெடுமே’’ என கூறினார்.
அதற்கான பொருளை ஆங்கிலத்தில் கூறினார்.

வயலின் ஒரு பகுதியில் விளைந்த நெல்லை அரிசியாக்கி சில சோற்றுக்கவளங்களை யானைக்குக் கொடுத்தால் போதுமானது. ஆனால் அந்த யானையே வயலுக்குள் புகுந்து மேய தொடங்கினால் என்ன ஆகும்? யானை தின்னும் கதிர்களின் அளவை விட அதன் கால்கள் பட்டு வீணாகும் நெல்கதிர்களே அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டார்.

இந்த பாடலில் மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் கூறிய அறிவுரை, யானை வயலில் புகுந்து நெற்கதிர்களை வீணாக்குவதுபோல மக்கள் மீது வரியை திணித்து குடிமக்களை கசக்கிப்பிழிந்து வரி வசூல் செய்ய மன்னன் முற்பட்டால் யானை புகுந்த வயல்போல அவனுக்கும் பலன் தராமல், மக்களும் பயன்பெறாமல் சீர்கெடும் என்பதாகும்.

அப்படித்தானே உங்கள் வரியும் இருக்கிறது! அப்புறம் எதற்கு இந்த எடுத்துக்காட்டை நீங்கள் எடுத்துப் பேசுகிறீர்கள்? என்று நேற்றிலிருந்து- நிதிஅமைச்சருக்கு, மோடி அரசுக்கு எதிரான கருத்துக்களோடும் கருத்துப் படங்களோடும் இணையம் கலை கட்டி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,205.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.