நிர்மலா சீதாராமன் தெரிவித்த பிசிராந்தையார் பாடல், நேர் எதிரான ஒப்பீடு. எல்லாவற்றிலும் வரி ஏற்றம் செய்து விட்டு, வரிவிதிப்பின் மீது கோபப்படும், பிசிராந்தையார் பாடலை மேற்கோள் காட்டியிருக்க வேண்டாம். ஏன்கிறார் கூட்டணிக் கட்சியான பாமகவின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ். 21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நடப்பு மற்றும் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பதிகை செய்தார். இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான பாமகவின் நிறுவனர் ராமதாஸ், வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து பின்வருமாறு: “தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 விழுக்காட்டில் இருந்து 12.5 விழுக்காடாக உயர்த்தி இருப்பது ஏற்று கொள்ள முடியாதது. ஏற்கனவே தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கி வரும் நேரத்தில் இந்த வரி உயர்வால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.700 வரை உயரும் அபாயம் உள்ளது. அதே போல பெட்ரோல், டீசல் மீது ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருப்பது அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டினார். ஆனால், அவர் அறிவித்துள்ளவரி உயர்வுகள் பிசிராந்தையார் கூறிய அறிவுரைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,205.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.