மீரா வெளியேற்றப்படக் கூடாது என பிக்பாஸ் கருதுவதாலேயே, மீராவுக்கு பார்வையாளர்களிடம் அனுதாபம் பெற்றுக் தருவதற்காகவே, மீரா வெளியேற்ற நாடக வேலைப்போட்டி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாக தனது யூகத்தை கீச்சுப் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. 21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில், கமல் தொகுத்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்று வெளியேற்ற நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் மீராவை வெளியேற்றுவது போல் போட்டியாளர்கள் நாடகம் ஆடினர். இதனால் அவரும் உருக்கமாக அழுதார். பின்னர் அது நாடகம் என உண்மையை ஒப்புக் கொண்டனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி இது பற்றி கீச்சு ஒன்றை வெளியிட்டுள்ளார். மீராவைக் காப்பாற்றத்தான் பிக் பாஸ் வெளியேற்ற நாடகத்தை நடத்தி இருப்பதாக விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி. அதில் அவர், இந்த கிழமை பிக்பாஸில் மீரா மிதுன் தான் வாக்குகளில் பின்தங்கியுள்ளார். ஆனால் அவரும் மதுமிதாவும் தாம் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இலக்குத்தரத்திற்கான (டிஆர்பி) உள்ளடக்கமாக (கன்டன்ட்) இருக்கின்றனர். அவர்கள் இல்லேனா உள்ளடக்கம் அடிவாங்குமே. இதில் மதுமிதா பிக்பாஸ் பார்வையாளர்களின் பல இலட்சங்கள் வாக்குகளைப் பெற்று பாதுகாப்பில் முதலிடத்தில் இருக்கிறார். அதனால் தான் மீரா மீது மக்கள் அனுதாப அலை வீச வேண்டும் என வேண்டுமென்றே அவரை வெளியேற்றுவது போல நடிக்கும் வேலைப்போட்டி (டாஸ்க்) பிக்பாஸ் போட்டியாளர்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது என விமர்சித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,205.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



